தமிழரின் சமூக வாழ்வில் நெல்
இன்றைய காலகட்டத்திலும் நெல்லும் நெல்லிலிருந்து பெறப் படும் அரிசியும் தமிழர்களின் பண்பாட்டோடும் வாழ்வியலோடும் ஒன்றிணைந்த ஒரு பொருளாக உள்ளதைக் காணலாம். “நெல் முளைக்கும் பருவம். அரிசி முடியும் பருவம். எனவேதான் பழந் தமிழர் திருமணத்தின்போது வாழ்த்தும் நோக்கில் மணமக்கள் மீது விதையாக இருக்கிற நெல்லைத் தூவினார்கள். நெல் முளைக்கும். எனவே மணமக்கள் வாழ்வில் பதினாறு செல்வம் முளைக்கட்டும் என்பதன் அடையாளமாக நெல்லைத் தூவினார்கள். நெல்லும் அரிசியும் தமிழரின் மங்கல, அமங்கல நிகழ்வுகளில் தொடர்பு கொண்டது. திருமணத்தின்போது நெல்லால் வாழ்த்திய தமிழர்கள் இறப்பின்போது எல்லாம் முடிந்துவிட்டது என்பதாக இனி முளைக்காத அரிசியால் இறந்தவருக்கு வாய்க்கரிசி இட்டனர். இவற்றைக் கூர்ந்து கவனித்தால் வாழ்க்கையை (விதையால்) நெல்லால் தொடங்கி (முடிந்துபோன) அரிசியால் முடித்துவைப்பதாக அர்த்தம் வருகின்றது. எனவே தமிழர் பண்பாடு நெல்லோடு தொடங்கியதாகச் சொல்ல முடிகின்றது” (மாத்தளை சோமு. 2005:42). மாத்தளை சோமுவின் இக்கருத்தின் அடிப்படையில் நெல்லானது நம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்துள்ளது என்பதை உணரமுடிகிறது.
தமிழர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை கடைப்பிடிக்கும் சடங்குகளிலும் வழிபாட்டு முறைகளிலும் நெல்லும் நெல்லில் இருந்து பெறப்படும் அரிசியும் எத்தகைய பங்கு வகிக்கின்றன என்பது பின்வருமாறு தொகுத்துரைக்கப்படுகிறது.
1.வழிபாடுகளில், சிறுதெய்வ வழிபாடாக இருந்தாலும் பெருந் தெய்வ வழிபாடாக இருந்தாலும் கோவில்களில் படைக்கப்படும் ‘பொங்கல்’ அல்லது ‘அமுது’ என்று அழைக்கப்படும் உணவு வகை பச்சரிசியில் வெல்லம் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ தயாரிக்கப்படுகின்றது. வேறுவகைத் தானியங்கள் பயன்படுத்தப் படுவதில்லை.
2. கோவில்களில் நேர்த்திக்கடனாகப் போடப்படும் மாவிளக்கு களில் பச்சரிசிமாவுடன் வெல்லம் சேர்த்துச் செய்யப்படும் விளக்குகளில் மட்டுமே எண்ணெய் அல்லது நெய் ஊற்றித் திரிபோட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.
3. சிறுதெய்வ வழிபாட்டில் தயாரிக்கப்படும் ‘துள்ளுமாவு’ என்பது பச்சரிசியை இடித்து வெல்லம் சேர்த்துத் தயாரிக்கப் படுகிறது.
4. மூலமுதற்கடவுள் எனப் போற்றப்படும் பிள்ளையார் வழிபாட்டிலும், கல்விக் கடவுளாகக் கருதப்படும் சரசுவதி வழிபாட்டிலும், தொழில்களில் பயன்படுத்தப்படும் கருவிகளை வழிபடும் ஆயுத பூசையிலும் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் அவல், பொரி முக்கிய இடம்பெறுகின்றது. இப்பொருள்களைப் படைக்காமல் கடவுள் வழிபாடு நிகழ்வதில்லை.
5. விநாயகக் கடவுளின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியன்றும், கார்த்திகைத் தீபத்திருநாள் அன்றும் கொழுக்கட்டையைப் படைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம். அதேபோல் திருமணமாகாத பெண்கள் கடைப்பிடிக்கும் ஔவையார் நோன்பிலும் கொழுக்கட்டை செய்து, இரவு நேரத்தில் பெண்கள் மட்டும் வழிபடுவது வழக்கம். அத்தகைய கொழுக்கட்டை, பச்சரிசி மாவிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. நாட்களில் தயாரிக்கப்படும்
6. கோவில்களிலும் சத்திரங்களிலும் மடங்களிலும் குருபூசை வழிபாட்டின்போது நடைபெறும் அன்னதான நிகழ்விலும் அரிசி வகை உணவே பரிமாறப்படுகின்றது. வேறு தானிய வகைகள் பயன்படுத்தப்படுவதில்லை.
7. அரிசி மாவினால் வீட்டின் முற்றத்திலும் கோவில்களிலும்
கோலமிடுவது தமிழர்களின் தொன்றுதொட்ட வழக்கமாகும். 8. உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல்லிலிருந்து பெறப்பட்ட அரிசியில் பொங்கல் தயாரிக்கப்படுகின்றது.
9. குழந்தைப் பருவத்தில் பால்பல் விழுந்து மீண்டும் புதிதாகப் பல் முளைக்கும். இந்தப்பல் முளைப்பதில் தாமதம் ஏற்பட்டால், குழந்தையின் பல் விழுந்த இடத்தின் ஊன்பகுதியைத் தாய்மாமன் நெல்லினால் கீறிவிட வேண்டும். அவ்வாறு செய்தால், பல் விரைவில் முளைத்து விடும் என்பது தமிழர்களின் நம்பிக்கை.
10.பெண்கள் பூப்படைந்ததைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் சடங்குகளில் ‘புட்டுச்சுத்துதல்’ ஒரு சடங்காகும். இச்சடங்கிற்கான புட்டு. பச்சரிசி தயாரிக்கப்படுகின்றது. மாவை வேகவைத்துத்
11. பெண் பிள்ளைகள் தொடர்பான சடங்கு முறைகளில் பெண் பிள்ளைகளை அமர வைக்கும் பொழுது, அவ்விடத்தில் நெல்லைக் கொட்டிப் பரப்பி அதன்மீது வெள்ளை நிற ஆடையினை விரித்து, அதன்மேல் மணைப்பலகையைப் போட்டு, அப்பலகையில் அமர வைப்பர்.
12. திருமணமான புதுமணத் தம்பதிகளை வாழ்த்தும்பொழுது, மஞ்சளில் தோய்த்த அரிசியைத் தூவி வாழ்த்துவர். நெல்லைத் தூவி வாழ்த்திய செய்தி தமிழிலக்கியங்களில் காணப்படுகின்றது.
13. திருமணத்தின்போது நெல்லை நாழியில் நிரப்பி வாசற்படியில் வைத்து மணப்பெண் முதன்முதலில் மணமகன் வீட்டிற்குள் நுழையும்பொழுது காலால் தள்ளிவிட்டுத் தாண்டி வரச்செய்வர். 14. திருமணம் முடிந்த பிறகு, பெண்ணின் சேலைமடியில் அரிசி,
தேங்காய், வெற்றிலை, பாக்கு முதலிய பொருட்களை நிரப்பி மணமகன் வீட்டிற்கு அனுப்புவர். 15. கருவுற்றிருக்கும் பெண்களைக் குழந்தைப்பேறுக்காகத் தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் சடங்கில் பரிமாறப்படும்.
‘கட்டுச்சோறு’ உணவு வகைகள் நெல்லிலிருந்து பெறப்படும்
அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகின்றது.
16.இறந்தவர்களின் உடலின் தலைமாட்டில் வைக்கப்படும் நிறை நாழியில், நெல்லோ அரிசியோ நிரப்பி வைக்கப்படுகின்றது.
17.இறந்தவர்களுக்குச் செய்யப்படும் ஈமச்சடங்கில் ‘வாய்க்கரிசி போடுதல்’ ஒரு சடங்காகும். இச்சடங்கிற்கு வேண்டிய அரிசி, பொதுவாக இறந்தவரின் மகள் வீட்டிலிருந்து கொண்டு வரப்படும். இச்சடங்கிற்கும் நெல்லிலிருந்து பெறப்படும் அரிசியே பயன்படுத்தப்படுகின்றது.
தானிய வகைகளில் நெல், கம்பு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற தானியங்கள் தமிழகத்தில் பயிர் செய்யப்பட்டாலும் நெல் மட்டும் பிற தானிய வகைகளிலிருந்து வேறுபட்டு நீர்வளமுள்ள நிலங்களில் மட்டும் விளையும் தானிய வகையாகும். பிற தானிய வகைகள் புன்செய் நிலங்களில் மானாவாரியாகப் பயிர் செய்யப்படும் தானிய வகைகளாகும். அத்தகைய நிலங்கள் பெரும்பாலும் நீர்வளம் இல்லாது வறண்ட நிலங்களாக இருக்கும். நெல் அல்லாத பிற தானிய வகைகள் குறித்துப் புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியத்தில் (தமிழகக் காண்டம் – தமிழகப் படலம்) கீழ்க்காணுமாறு பாடல் புனைந்துள்ளார்.
“முதிரையுஞ் சாமையும் வரகும் மொய்ம்மணிக் குதிரைவா லியுங்களங் குவித்துக் குன்றெனப் பொதுவர்கள் பொலியுறப் போர டித்திடும் அதிர்குரல் கேட்டுழை யஞ்சி யோடுமே” (60)
நீர்வளம் மிகுந்த இடங்களில் விளைகின்ற நெல், தமிழர் பண்பாட்டில் செழுமையின் அடையாளமாக இனங்காணப் பட்டுள்ளது. ஆகவே, நெல் தமிழர் பண்பாட்டில் தனி இடம் வகிப்பதை மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன.
அரிசி என்ற சொல் பொதுவாக நெல்லைத் துவைத்து உமியையும் தவிட்டையும் நீக்கிப் பெறப்படும் அரிசியை உணர்த்தினாலும், பிற தானிய வகைகளும் துவைத்து உமி நீக்கிய பின் அரிசியென்றே அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, கம்பிலிருந்து பெறப்படுவது.
A Dictionary of Indigenous Pady varities of the Tamils.
Buy:
விலை:
Reviews
There are no reviews yet.