Description
திரு. க. நெடுஞ்செழியன் அவர்கள் 1944 ஜூன் 15 தஞ்சையில் பிறந்தார். தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணியாற்றிய இவர் முனைவர் பட்டம் பெற்றவர், சிறந்த எழுத்தாளரான “ஆசீவகமும் ஐயனார் வரலாறும்”, “தமிழ் இலக்கியத்தில் உலகாயிதம்” போன்ற பதினெட்டு நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தை அடிப்படையாக கொண்டு, தமிழ் இலக்கியத்தில் உலகாயுதம் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றார். மேலும் இம்முனைவர் பட்ட ஆய்வில் ஆசீவகம் பற்றிய ஆய்வு தேவைப்பட்டதால், ஆசீவகத்தின் வேர் பற்றி ஆராயத்தொடங்கினார். தொடக்கத்தில் ஆசீவகம் வடநாட்டு சமயம் என்று நினைத்த பேராசிரியர் பின் ஆசீவகம் தமிழரின் வாழ்வியல் என்பதை கண்டுணர்ந்தார். ஆசீவகத்தைத் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்தவர் மற்கலி கோசலர். இவர் புத்தரின் சமகாலத்தவரும் மகாவீரரின் நண்பர் என்று நம்பப்படுகிறது. தமிழகம் எங்கும் உள்ள அய்யனார் கோவில்களே ஆசீவகத்தின் அடையாளங்கள்.