எகிப்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள தொடர்பை ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும் நுால்.
சிந்து சமவெளியில் பரவி மெசபடோமியா, சுமேரியா வழியாக தமிழர் நாகரிகம் எகிப்தை அடைந்ததாக எடுத்துரைத்துள்ளது.
எகிப்து பிரமிடுகள், தமிழக கட்டடக்கலையுடன் பொருந்துவதை பதிவு செய்கிறது. ஆய்வாளர் ஹெரோடோடஸ் எழுதிய அடிப்படையில் பினீசியர், இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து சென்று குடியேறியோர் என்று தெரிவிக்கிறது.
மத்திய தரைக்கடல் நாடுகளில் தமிழர் நாகரிகம் பரவியதை தெளிவுபடுத்துகிறது. எகிப்து பழைய பெயர் தேடலில் தமிழ் மறைந்து கிடப்பதாக வியப்பில் ஆழ்த்துகிறது. தமிழர் நாகரிகத்தை தொல்லியல் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும் நுால்.