அகத்தியர் அருளிச் செய்த சரக்கு நூறு – முனைவர் கா. கலைச்செல்வி

400

சுவடிகளின் அடிப்படையில் ஐந்திலக்கண ஆய்வுகளோடு பண்டைய மருத்துவத் தகவல்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தி பதிவு செய்துள்ள நுால். சரக்கு எனும் சொல்லுக்கான விளக்கம் கூறி, சரக்கு 100 சுவடிகளின் அமைப்பு, குறியீடுகள், பாடல்களில் உள்ள எழுத்தமைதி, யாப்பமைதி, பாடல்களின் தன்மை, வகைப்பாடு, பொருளமைதி, பதிப்பு முறை போன்றவை தரப்பட்டுள்ளன.அகத்தியர் வரலாற்றை எடுத்துரைத்து, அச்சில் வராத சுவடிகள் பெருமளவில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் சுவடிகள் உள்ள இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அகத்தியர் இயற்றிய, 72 பாடல்களுக்கும் உரை விளக்கம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலிலும் ஒரு நோய்க்கு இயற்கைப் பொருட்களால் மருந்து செய்முறை விளக்கி கூறப்பட்டுள்ளது. எந்தெந்த பொருளால், மூலிகையால் எந்த நோய் குணமாகும் என்பதை தெளிவுபடுத்துகிறது.

தமிழ் மருத்துவத்தின் சிறப்பை தெரிந்து கொள்ள வழிவகுக்கிறது. மருத்துவச் சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ள நோய்க்கூறுகளையும், மருந்துகளையும், செய்முறைகளையும் அறியச் செய்கிறது. சித்தர் வரலாறு, சித்த மருத்துவச் சுவடிகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது. மருத்துவ அறிவின் தோற்றம், மருந்துகளின் பெயர், நோய்க்கான மூல காரணங்கள், குணப்படுத்தக்கூடிய நோய்கள் மற்றும் ரசவாத முறைகள், மருந்து செய்முறைகள் சுவடியில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நோய்களின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டுள்ளது.
 
இரண்டாம் பகுதியில் ஐந்திலக்கண ஆய்வின் வழி, எழுத்தியல், சொல்லியல், சொற்பொருளியல் பற்றி ஆய்வுரைகளைத் தந்து, யாப்பியல், அணியியல், நடையியல் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. ஒலியன்கள் பற்றிய ஆய்வு பயன் தருவதாக உள்ளது. பிற்சேர்க்கையாக மூலிகைகளின் தாவரவியல் பெயர் படங்கள் தரப்பட்டுள்ளன. பாடல்களுக்கு சொல்லடைவுகளும், துணை நுால் பட்டியலும் தரப்பட்டுள்ளது. தமிழ் மருத்துவச் சிறப்பை தெரிந்து கொள்ள உதவும் ஆய்வு நுால்.
Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சுவடிகளின் அடிப்படையில் ஐந்திலக்கண ஆய்வுகளோடு பண்டைய மருத்துவத் தகவல்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தி பதிவு செய்துள்ள நுால். சரக்கு எனும் சொல்லுக்கான விளக்கம் கூறி, சரக்கு 100 சுவடிகளின் அமைப்பு, குறியீடுகள், பாடல்களில் உள்ள எழுத்தமைதி, யாப்பமைதி, பாடல்களின் தன்மை, வகைப்பாடு, பொருளமைதி, பதிப்பு முறை போன்றவை தரப்பட்டுள்ளன.

அகத்தியர் வரலாற்றை எடுத்துரைத்து, அச்சில் வராத சுவடிகள் பெருமளவில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் சுவடிகள் உள்ள இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அகத்தியர் இயற்றிய, 72 பாடல்களுக்கும் உரை விளக்கம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலிலும் ஒரு நோய்க்கு இயற்கைப் பொருட்களால் மருந்து செய்முறை விளக்கி கூறப்பட்டுள்ளது. எந்தெந்த பொருளால், மூலிகையால் எந்த நோய் குணமாகும் என்பதை தெளிவுபடுத்துகிறது.
 
Weight0.25 kg