Title: பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
Author: B. ரியாஸ் அஹமது
Category: கட்டுரை
தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலும் தனது ஆக்டோபஸ் கரங்களை சங்பரிவார்கள் விரித்து வருகின்றனர். யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச முதல்வரானதை தொடர்ந்து இந்து யுவ வாகினி போஸ்டர்களை தமிழக தலைநகரத்தில் காண முடிகிறது.
வெறுமனே பெரியார் பிறந்த மண் என்று பேசிக் கொண்டிருப்பதால் சங்பரிவாரின் வளர்ச்சியை தடுத்துவிட முடியாது. இனி வரும் காலம் செயல்படுவதற்கான காலம். இந்த செயற்களத்தில் சங்பரிவார் எதிர் சக்திகள் அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.