திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம் – பா.ரா.சுப்பிரமணியன்

1,200

திராவிடம்’ என்னும் பொதுச் சொல் தென்னிந்தியாவில் பெரும்பான்மையாக வாழ்பவர்களுடைய சொந்த மொழிகளையே உள்ளடக்கியுள்ளது. ஒரிசா, மேற்கிந்திய மாவட்டங்கள், குஜராத்தியும் மராத்தியும் பேசப்படுகிற தக்காணம் தவிர, இந்தியாவின் முழுத் தீபகற்பப் பகுதியில் விந்திய மலையிலிருந்து நர்மதை வரை, குமரி முனைவரை மக்கள் வாழ்ந்தனர் – இவை மிகப் பழங்காலம் தொட்டு மக்கள் வசிக்கும் இடங்கள் ஒரே இனத்தின் பல்வேறு பிரிவுகளாகவும். ஒரே மொழியின் வெவ்வேறு கிளை மொழிகளாகவும் விளங்கும் மொழியைக் குறிக்கும் விதமாக இந்தத் ‘திராவிடம்’ என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. ஒரே மூல மொழியிலிருந்து சிதறிக்கிடப்பனவற்றை வடக்கிலும், வங்காளத்தில் உள்ள ராஜ்மஹல் குன்றுவரையிலும், பலுஜிஸ்தானத்தின் மலைச் சரிவுகள் வரையிலும் தேடிச் செல்ல முடியும்.

சமஸ்கிருதச் சிதைவிலிருந்து உருவான மொழிகளான குஜராத்தி, மராத்தி (அதிலிருந்து பிரிந்த கொங்கணி) மற்றும் ஒட்டரதேச மொழியானஓரிய அல்லது ஒரிசா ஆகியன இந்தியத் தீபகற்பத்தின், வரையறுக்கப்பட்ட பகுதியில் இந்திய மக்கள் பேசும் பிராந்திய மொழிகளாக நிலவுகின்றன; இவையும் திராவிட மொழிகளும் நீங்கலாகத் தீபகற்ப இந்தியாவில் வாழும் சில பிரிவினர் இந்த மண்ணிற்கே உரியவை என்றோ பிராந்திய மொழிகள் என்றோ கூற முடியாத பல மொழிகளைப் பேசுகின்றனர் அல்லது அவ்வப்போது பயன்படுத்துகின்றனர்.

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

திராவிடம்’ என்னும் பொதுச் சொல் தென்னிந்தியாவில் பெரும்பான்மையாக வாழ்பவர்களுடைய சொந்த மொழிகளையே உள்ளடக்கியுள்ளது. ஒரிசா, மேற்கிந்திய மாவட்டங்கள், குஜராத்தியும் மராத்தியும் பேசப்படுகிற தக்காணம் தவிர, இந்தியாவின் முழுத் தீபகற்பப் பகுதியில் விந்திய மலையிலிருந்து நர்மதை வரை, குமரி முனைவரை மக்கள் வாழ்ந்தனர் – இவை மிகப் பழங்காலம் தொட்டு மக்கள் வசிக்கும் இடங்கள் ஒரே இனத்தின் பல்வேறு பிரிவுகளாகவும். ஒரே மொழியின் வெவ்வேறு கிளை மொழிகளாகவும் விளங்கும் மொழியைக் குறிக்கும் விதமாக இந்தத் ‘திராவிடம்’ என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. ஒரே மூல மொழியிலிருந்து சிதறிக்கிடப்பனவற்றை வடக்கிலும், வங்காளத்தில் உள்ள ராஜ்மஹல் குன்றுவரையிலும், பலுஜிஸ்தானத்தின் மலைச் சரிவுகள் வரையிலும் தேடிச் செல்ல முடியும்.

சமஸ்கிருதச் சிதைவிலிருந்து உருவான மொழிகளான குஜராத்தி, மராத்தி (அதிலிருந்து பிரிந்த கொங்கணி) மற்றும் ஒட்டரதேச மொழியான
ஓரிய அல்லது ஒரிசா ஆகியன இந்தியத் தீபகற்பத்தின், வரையறுக்கப்பட்ட பகுதியில் இந்திய மக்கள் பேசும் பிராந்திய மொழிகளாக நிலவுகின்றன; இவையும் திராவிட மொழிகளும் நீங்கலாகத் தீபகற்ப இந்தியாவில் வாழும் சில பிரிவினர் இந்த மண்ணிற்கே உரியவை என்றோ பிராந்திய மொழிகள் என்றோ கூற முடியாத பல மொழிகளைப் பேசுகின்றனர் அல்லது அவ்வப்போது பயன்படுத்துகின்றனர்.

வடக்கிலும் தெற்கிலும் அல்லது எந்தவொரு பகுதியிலும் பிராந்திய மொழியாக இருந்திருக்கக்கூடும் என்று கூற முடியாத சமஸ்கிருதம் தென்னிந்திய பிராமணர்களால் படிக்கப்படுகிறது. ஓரளவு புரிந்துகொள்ளவும் படுகிறது; இவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே குடியேறிய பிராமண ஆதிக்கத்தினரின் சந்ததிகள்; இவர்களுக்குத் திராவிடர்கள் தங்களது வாழ்வியல் உயர்கலை களுக்கும், கணிசமான இலக்கிய வளத்திற்கும் கடன்பட்டிருப்பதாகத் தெரிகிறது

Weight0.25 kg