Description
நவீன மாந்தரின் சிந்தனையை பாதித்து பெரும் மாற்றத்தைச் செய்த அதிமனிதர்களில் ஒருவரான டார்வினுடைய மையமான விவாதப் பொருள்கள் மட்டுமே இந்நூலில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. இயற்கைப் பொருட்களை அழகியல், தத்துவ இயல், சமய இயல் வழிபாட்டுப் பொருட்களாக டார்வின் நோக்கவில்லை. இயற்கையின் இயக்கத்தின் ஊடாகச் சிறகடிக்கும் ஓர் ஒட்டுமொத்தமான பேரழகை டார்வின் கண்டுள்ளார், ரசித்துள்ளார். இந்த ரசனை கூடினால் நாளைய உலகம் பிழைக்கும். மனிதர்கள் இன்னும் இயற்கையின் பகுதிகளே என்பதை டார்வின் நினைவூட்டிக் கொண்டிருப்பதை இந்நூல்வழி உணரலாம்.





















