இந்தியாவின் சுருக்கமான வரலாறு

190

இந்தியா என்னும் மகத்தான புதிரைப் புரிந்துகொள்ள உதவும் கையேடு இது. விறுவிறுப்பான நடையில் வரலாற்றை சுவாரஸ்யமாக எடுத்துரைக்கும் நூல் இது

Add to Wishlist
Add to Wishlist

Description

5,000 ஆண்டுகால இந்திய வரலாறு மிகச் சுருக்கமான வடிவில் இந்தியாவின் பண்டைய நாகரிகங்களின் இடிபாடுகளில் தொடங்கி உலகின் முக்கியமான சக்திகளில் ஒன்றாக அது திகழும் இன்றைய கட்டம்வரையிலான வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் நூல். அற்புதமான, சிடுக்கான, பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றினூடே உருவாகிவந்த நாடு இந்தியா.

ஆரம்பகால மனிதர்கள், ஹரப்பா நாகரிகம், இந்தியப் பேரரசர்கள், தென்னகத்தின் அரசுகள், முகலாயர்கள், பிரிட்டிஷ் ஆட்சி, சுயாட்சிக்கான போராட்டம், சுதந்திர இந்தியாவின் பயணம், இன்றைய நம்பிக்கைகள், சவால்கள் ஆகிய அனைத்தையும் வரலாற்றாசிரியர் ஜான் ஜுபர்ஸிக்கி தொகுத்து வழங்குகிறார். அசோகர், சந்திரகுப்தர், சாணக்கியர், ராஜராஜ சோழன், அக்பர், ராபர்ட் கிளைவ், காந்தி, ஜின்னா, ஜவஹர்லால் நேரு எனப் பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்களோடு சமகால அரசியல் பற்றிய பார்வையும் உள்ளது. தமிழக அரசர்கள் பற்றியும் இந்தியாவின் பக்தி இயக்கத்திற்குத் தமிழகம் அளித்த கொடை பற்றியும் இந்த நூல் விவரிக்கிறது. இந்தியா என்னும் மகத்தான புதிரைப் புரிந்துகொள்ள உதவும் கையேடு இது. விறுவிறுப்பான நடையில் வரலாற்றை சுவாரஸ்யமாக எடுத்துரைக்கும் நூல் இது

Additional information

Weight0.250 kg