இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறத்தில் பரிட்டிஷாரின் தோல்வியை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் என்றார் அன்றைய இங்கிலாந்துப் பரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்… எளிய படைத்தளபதியின் வீரமும் விவேகமும், பரிட்டிஷ் ராணுவத்தை நிலைகுலையச் செய்த அவரின் கொரில்லாத் தாக்குதல்களும் திரைப்படத்தை விஞ்சும் விறுவிறுப்புடன்…
சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் ராணுவத்தை மண்ணைக் கவ்வச் செய்து, பிரிக்கப்படாத இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களில் தனி சுதந்திர ஆட்சி நடத்திவந்த இப்பி கிராமத்தைச் சேர்ந்த பக்கீர் என்ற நாட்டுப்புற நாயகர் ஒருவரின் வரலாற்றைச் சொல்லும் புதினம் தான் இந்த நூல்.