இருளர்களின் வாழ்வும் வரலாற்றுப் பூர்வீகமும்

85

சமவெளியில் வாழும் இருளர்களைப் பற்றிய போதுமான தகவல்கள் பொதுவெளியில் அதிகம் அறியப்படாத நிலையில் தமிழக சேசு சபையைச் சார்ந்த ஆய்வாளர்கள் ஆறுமாத காலம் அவர்கள் வாழ்விடம் சென்று களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களது மொழியிலேயே பதிவுகள் செய்யப்பட்டு அவற்றை எழுத்தில் கொண்டு வந்த ஆவணமாக விளங்குகிறது இந்நூல்.

இருளர் இன மக்களின் வகைகள், பொது இயல்புகள், பெயர்க்காரணம், வாழ்விடம், பெயர் விளக்கம், வாழ்க்கைக்கூறுகள், வழக்காற்றியல் போன்ற தலைப்புகளில் களஆய்வு அடிப்படையில் சேகரிக்கப்பட்ட கருத்துகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

Out of stock

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

இருளர்களின் பிரிவு தமிழ்நாட்டில் பழங்குடிகளில் இரண்டாவது இருளர்கள் ஆவர். முதலாவது பெரிய இனம் மலையாளிகள் ஆகும்.

தமிழகத்தில் உள்ள பழங்குடிகள் பின்வருமாறு

1. அடியர்

2. ஆறு நாடர்

3. இரவாளர்

4. இருளர்

5. காடார்

6. கம்மாரா

7. காணிக்காரர்

8. கனியன்

9. காட்டு நாயகர்

10. கொச்சு வேலன்

11.கொண்டக்காப்பு

12. கொண்டாரெட்டி

13. கொரகா

14. கோடா

15. குடியா

16.குறிஞ்சர்

17. குறுமர்

18. மகாமலசர்

19. மலை அரையர்

20. மலைப் பண்டாரம்

21. மலை வேடர்

22 மலைக் குறவர்

23. மலைசர்

24. மலையாளி

25. மலைக்கண்டி

26. மன்னன்

27.மூடுகர்

28. முதுவர்

29. பழையர் 30.பழியன்

31. பழியர்

32. பணியர்

33. சோலகா

34. தோடர்

35. ஊராளி

போன்றோர் வாழ்கின்றனர். இந்த பழங்குடியினர் பிரிவுகளில் இருளர் பிரிவுகள் மிக முக்கியமானது ஆகும்.

நீலகிரியில் உள்ள மேல்நாடு இருளர் முக்கியமான பிரிவாக உள்ளன. இவர்கள் தனித்த அடையாளங்களுடன் வாழ்கின்றனர். இவர்கள் மலைப் பிரதேசங்களில் மட்டுமே வாழ்பவர்கள். இருளர்களின் ஏழு உள் குலங்களைக் கொண்ட சமூகமாகவும் உள்ளனர். இவர்கள் பழங்காலம் தொட்டே வேறுபடுகின்றனர். இந்த இருளர் களுக்கென்று சில இனப் பெயர்களை வைத்து அழைக்கின்றனர். இவர்கள் இருளர்; இருயாறு என்பர். இதனை ‘வில்லியன் நோபல்” என்ற அறிஞர்தான் கண்டுபிடித்துள்ளார். இருளர் பிரிவுகளின் வகைகளை அதன் இனப்பெயர்களைக் கொண்டே அழைக்கின்றனர். இவர்களை இழிவுபடுத்தும் விதமாக இருளப்பசங்க, காட்டுப்பசங்க என்று மோசமாக அழைக்கின்றனர். ஆனால் இருளர்கள் அவர்களை இருளாயிரு என்று அழைப்பதாக எமில் எமிக் (Emic) குறிப்பு கூறுகின்றது. அதன் பொருளான இருள கிழங்கு என்றும் இருட்டு என்றும் அதன் காரணத்தைக் கூறுகின்றனர்.

2.2. இருளர்களுக்கு உள்ள பிரிவுகள்

1. மேல்நாட்டு இருளர்

2. கசப இருளர்

3. வேட்டைக்கார இருளர்

4. ஊராளி இருளர்

5. வில்லியன் இருளர்

இருளர் பழங்குடி இன மக்களை பல வகைகளில் பழங்குடிகளைப் பற்றி வரையறை செய்தனர். இதில் பலவகையான

1. எழுத்து வடிவமே இல்லாத பழங்குடிகள் (Pre-literate Society)

எழுத்து வடிவமே இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்கள். இது காலனி ஆட்சியாளர்கள் பயன்படுத்திய சொல்லாடல் ஆகும். இவர்கள் ஆதி சமூகமாகக் கருதப்படுகின்றது. 2.

பழங்குடியினர் சமூகம் (மூதாதையர்) (Aboriginal Society) இது முக்கியமான சமூகம் ஆகும். இவர்களை தமிழகத்தில் கூட பார்க்க முடியும். ஆனை மலையில் உள்ள காடர்கள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். கேரளத்தில் இவர்களைச் சோலை நாயக்கர் என்று பேச்சு வழக்கில் அழைக்கின்றனர். இவர்கள் குகைகளில் தான் வாழ்வார்கள்.

3. பழமையான சமூக பழங்குடிகள் (Primitive Ingey இது பொதுவான வழக்கமாகும். தமிழகத்தில் உள்ள 37 பழங்குடிகளில் 10 பேர் இந்த வகையைச் சார்ந்தவர்கள். இவர்கள் மண்ணின் மைந்தர்களாகக் கருதப்படுகின்றனர்.

4. சமவெளிப் பகுதி பழங்குடிகள் (Plains Tribe)

இவர்கள் சமவெளிப் பகுதிகளில் வாழ்பவர்கள். இவர்கள் பல ஆண்டிற்கு முன்புதான் குடியேறி இருக்கின்றனர். இவர்கள் விவசாயத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள். இவர்கள் மற்ற சமூகங்களோடு இணைந்து வாழும் நிலையைக் கொண்டவர்கள்.

5. நாடோடி பழங்குடியினர் (Nomadic Tribe)

இவர்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப தங்களை இடம் பெயர்ந்து வாழ்பவர்கள். பொதுவாக இவர்கள் ஒரே இடத்தில் தங்க மாட் டார்கள். தற்போது தான் தங்க முற்படுகின்றனர். எடுத்துக்காட்டாக நறிக்கொறவர் சமூகம் அவர்களுக்கென்று நிரந்தரமான வாழ்விடம் கிடையாது.

6. அரை நாடோடி பழங்குடியினர் (Semi – Nomadic Tribe)

இவர்களும் நாடோடி வகையைச் சார்ந்தவர்கள். வருடத்தில் பாதி நாட்கள் நிலையான இடத்தில் இருப்பார்கள். பாதி நாள் நாடோடி வாழ்வைத்தான் வாழ்கின்றார்கள்.

7. குற்றப் பரம்பரை பழங்குடியினர் (Criminal Tribe) குற்றப் பரம்பரை நாடோடி பழங்குடி என்பவர்கள் காலனி ஆட்சி

காலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய வகையினம் ஆகும். ஆங்கிலேயர்கள் இவர்களை தவறாகப் பயன்படுத்தினர். காலனி ஆதிக்கத்தினர் வருவதற்கு முன்பு இங்கு சுயாதினமாக வாழ்ந்த பல்வேறு குடிகள் காலனி ஆட்சியாருக்கு ஆபத்தாக இருந்தால் (Criminal Tribe) பரம்பரை ஆக மாற்றப்பட்டனர். ஊர் காவல் படைக்குப் பேராத்தான இருந்ததால் குற்றப் பரம்பரையாக மாற்றப்பட்டனர். வெடிபொருள் களை இவர்கள் பயன்படுத்தினர்.

8.சீர் மரபினர் பழங்குடியினர் (De-notified Tribe) குறவர்களை

கண்காணிப்பதற்குரிய பழங்குடிகளாக இவர்கள் மாற்றப்பட்டனர். அந்த வகையில்தான் கல்லர் எதிர்ப்பு இயக்கம் உருவாகியது. சீர்மரபினர் அரசு உதவி பெறும் கூலிகளாக இருந்தனர்.

வீகமும்

9. பின் தங்கிய பழங்குடிகள் (Backward Tribe)
இது அரசு உதவி பெறக்கூடிய பதமாகக் கருதப்படுகின்றது. வர்களை ஆங்கிலேயர்கள் தங்களுக்கு சேவகம் செய்யும் வகையினராக மாற்றப்பட்டனர். இந்த சமூகம் இட ஒதுக்கீடு பெற்று வளர்ச்சி அடைய இது ஒரு காரணமாக இருந்தது.

10. அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடிகள் (Scheduled Tribe)

இச்சமூகம் மிகவும் பின் தங்கிய நிலையிலே உள்ளது. இன்றும் இவர்கள் மீது பல்வேறு கொடுமைகள் இழைக்கப்படுகின்றது. அட்டவணைப் படுத்தப்பட்ட தளத்தில் அரசு பல்வேறு சலுகைகள் வழங்குகின்றது.

11.பூர்வீக குடிகள் (Autochthonous)

இவர்கள் பூர்வீக குடிகள்; பல பூர்வீக இனக் குழுக்கள் இந்த சமூகத்தில் அடங்கும். இவர்கள் மூலமாகத்தான் தமிழ்ச் சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியும். இவர்கள் இயற்கையோடு இணைந்து வாழும் தகவமைப்பைக் கொண்டுள்ளனர். இவர்கள்தான் நம்முடைய மூதாதையர் ஆவர்.

1.8 வரலாற்றுப் பெயர்க் காரணம்

ஒரு சமுதாயத்திற்கு மிகவும் பயன்படக் கூடியது வரலாற்றுப் பெயர்க் காரணமாகும். அந்த வகையில் இருளர் இன பெயர்க் காரணம் சங்க காலம் தொடங்கி இன்றைய தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஒரு நீண்ட நெடிய நிலையாகப் பிரிந்து பல்வேறு பெயர்களை வைத்துள்ளனர். இருளர் என்பது “இருளியாறு” என்று வில்லியம் நோபில் அவர்கள் அடையாளம் காட்டியுள்ளார். மக்கள் அவர்களை அன்புடன் அழைப்பது வில்லி, வில்லியர். வேட்டைக்காரன், வேடுவன், வேடர், பாம்புகாரன், காட்டுக்காரன் இன்னும் கீழாய் பொது மக்கள் அழைப்பது இருளப்பசங்க. காட்டுப்பசங்க என்பது ஆகும்.

அவர்களுக்கு இருக்கும் இனப்பெயர்களை வைத்தே மக்கள் அவர்களை மதிப்பீடு செய்கின்றனர். மனித குலத்தில் ஏற்பட்ட முக்கியமான கட்டங்கள் எல்லாம் இவர்களிடம் இருந்துதான் இன்றும் தொடர்ந்து வருவதைப் பார்க்கின்றோம். ஒரு வகையினர் இன்று இடத்தில் நிலையாகத் தங்கி வாழ வேண்டும் என்ற தகவமைப்பு களைக் கொண்டுள்ளனர். அதுவரை சென்று பொருள்களை சேகரித்த பெண்கள் இவர்கள் நிரந்தர வாழ்வாதாரத்தை வீட்டிற்குக் கொடுத்தனர்.

வரலாற்றுப் பூர்வீகமும் ஆண்கள் வேட்டைக்குச் செல்வதும் பெண்கள் உணவினை சேகரித்து குடும்பத்தை நிர்வகித்ததை நாம் பார்க்கின்றோம்.

இருளர்கள் தமிழ்நாட்டில் வாழும் மாவட்டங்களான தஞ்சை, விழுப்புரம், காஞ்சிபுரம், கோவை, நீலகிரி ஊட்டி, திருவண்ணா மலை, கடலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், சென்னை போன்ற இடங்களில் பரவலாக உள்ளனர். இருளர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் வாழ்கின்றார்கள் கிழக்கு மலைத் தொடர்ச்சியிலும் வாழ்கின்றனர்.

நீலகிரி போன்ற இடங்களில் வசிக்கும் இருளர்கள் தோட்டத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர். தோட்டத் தொழில் செய்யும் இருளர்கள் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆதி தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களில் தங்கள் வாழ்க்கையை மேற்கொண்டனர்.

இந்த ஐவகை நிலங்களில் ஒன்றான காடும் காடு சார்ந்த குறிஞ்சி பகுதிகளில் வாழ்ந்த ஆதி தமிழ்க் குடும்பங்கள் தான் இருளர் இனம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு இயற்கை மாற்றங்களாலும் வாழ்தல் வேண்டியும் தென்னிந்திய மாநிலங்களில் காடுகளில் பரவலாக வாழ்ந்து வந்தனர். பின்பு காட்டை விட்டு, மருத நில மக்கள் வாழும் நிலப்பகுதியில் வந்து வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வட தமிழகத்தின் பல மாவட்டங்களில் வாழும் இருளர்களிடம் குழு உணர்வும் சமூக இணைப்பும் அதிகமாகவே உள்ளது.

இருளர்கள் எந்த நிலையிலும் தங்கள் மரபைக் கைவிடாத தீவிர பற்றுக் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். மேலை நாட்டு அறிஞர் ரோமுலஸ் விக்டேகர் (Romulas Victacar) அமெரிக்க மானுடவியல் அறிஞர் ஆவார். இவர் பழங்குடி மக்களைப் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். குறிப்பாக இருள மக்களைப் பற்றி ஆய்விளை செய்தார். பாம்புகளைப் பற்றி ஆய்வு செய்தார். இதற்காக இருள மக்களோடு தங்கி, இருளர் பாம்பு பிடிக்கும் உரிமையைப் பெற்றும் கொடுத்தார். மேலும் எந்த பொந்தில் எந்த பாம்பு இருக்கின்றச் என்பதை இருள மக்களுக்குத்தான் தெரியும் என பொறுமையாகச் கூறுவார்.

காடுகளிலும் மலைகளிலும் சமவெளிப் பகுதிகளிலும் சுதந்திரம வாழ்ந்த மக்கள் வனப் பாதுகாப்புச் சட்டம் 1976-இல் கொண்டு வந்த பிறகு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருளர்களுடைய பாரம்பரி இருப்பிடம் அவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டது. வனத்திலிருந்து இருளர்களின் வாழ்வும் வரலாற்றுப் பூர்வீகமும் அன்னியப்படுத்தப்பட்டுள்ளனர். மீறி அங்கு தங்கினால் சட்ட விரோதமாகக் கருதப்படுகிறது. சிறிதும் அறிமுகம் இல்லாத இடத்திற்குச் சென்று குடியேறும் நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது அவர்களின் வாழ்வினை மீண்டும் கட்டி எழுப்பும் நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். முன்பு தற்போதைய நிலைபோல் கிராமப்புரத்திலும் வாழ்ந்தார்கள், குக்கிராமங்களிலும் வாழ்ந்தனர். ஆங்கிலேயர் வரவிற்குப் பின்னால் விவசாய கூலிகளாக மாற்றப்பட்டு விவசாயத்திற்கு மாறி, பின்பு குடியேற்றங்களுக்கு மாறினர். இதன் காலம் 1880 ஆகும். இத்தொழில் இருளர்களுக்கு பெரும் கஷ்டமாக இருந்தது. அப்போது சிறிய பனை ஓலையிலான வீடுகளைக் கட்ட முற்பட்டனர். கசப இருளர் வன விலங்குகளோடு வாழ்பவர்கள். கூட்டு குடும்பங்களில் வாழ்ந்தவர்கள் பின்பு தனிக்குடும்பங்களில் வாழ முற்பட்டனர். வீடுகள் அனைத்தும் பாரம்பரிய முறையிலே பல வீடுகள் அமைந்துள்ளன. தற்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

1.8 இருளர்கள் வாழ்விடம்

ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கி வாழாமல் இவர்கள் தங்களின் குடியிருப்பை அடிக்கடி மாற்றிய வண்ணம் இருப்பர். சிவர் பனையோலை வேயப்பட்ட தாழ்ந்த குடிசைகளில் வாழ்கின்றனர். மற்றவர்கள் மரத்தடியையோ, பாழடைந்த கட்டிடங்களையோ, வீடுகளின் தெருத் திண்ணைகளையோ தங்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ளனர். இருளர்கள் வாழும் இடமானது ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ளது. கிணற்று கரை ஓரமாகவும் உள்ளனர். சிலர் விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் குடிசை போட்டு வாழ்கின்றனர் அவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா கிடையாது காரணம் அவர்கள் வேறோர் இடத்திலிருந்து இங்கு குடியேறியதாகச் சொல்லப்படுகின்றது.

பெருவாரியான மக்கள் குளத்து வாழ்கின்றார்கள். வீட்டுமனை பட்டா கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகின்றது. இவர்களுக்கு இருளர்கள் வாழும் இருப்பிடங்களில் கரை ஓரமாகத்தான் குடிதண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களின் வீடு தென்னைமர ஓலையினால் பின்னப்பட்ட கூரை வீடாகவே உள்ளது அல்லது மேல்கூரை தகரம் பொருந்திய வீடாகவும் சில வீடுகளைக் காணமுடிகின்றன. மண் சுவரிலான சுவரையே பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான வீடுகளில் மின்சார இணைப்பு இல்லை. அரசு வழங்கும் இலவச மின்சாரம் கூட இல்லை.

Weight0.25 kg