பைபிளின்படி யூதர்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட தேசம் இஸ்ரேல் என்பது யூதர்களின் நம்பிக்கை. கடவுளே தங்களது நாட்டுக்கான எல்லையை யூதர்களின் முன்னோரான மோசேக்கு வரையறுத்து கொடுத்ததாக பைபிள் கூறுகிறது. அதனால் தான், இஸ்ரேல் நாட்டை வாக்களிக்கப்பட்ட தேசம் என்றும் அதைச் சுற்றியுள்ள சிறு சிறு தேசங்களை புனித தேசங்கள் என்றும் யூதர்கள் அழைக்கின்றனர். உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் ஒன்றுகூடி தங்களுக்கான இஸ்ரேல் தேசத்தை உருவாக்க எண்ணிய போது, கடவுள் கொடுத்த வாக்குறுதிப்படிதான் தங்களது தேசம் உருவாக வேண்டும் என பிடிவாதமாக எண்ணினர். இஸ்ரேல் நாடு எவ்வாறு உருவாகியது என்பதை தெளிவாக விளக்குகிறது இந்நூல். பைபிள் காலத்தில் இஸ்ரேலில் யூதர்கள் பட்ட கஷ்டங்களை தத்ரூபமாக விளக்குகிறது. எகிப்தில் அடிமையாக இருந்து இஸ்ரேலை நோக்கி யூதர்கள் வந்த போது, அவர்களுக்கான அனுபவங்களை தத்ரூபமாக விவரிக்கிறது. இஸ்ரேலை சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளுடன் பகையான சூழல் இருக்கும் நிலையில் பெட்ரோலிய வளம் இல்லாமல் சூரிய ஒளியை பயன்படுத்தி எப்படி பொருளாதார வளர்ச்சி பெறுவது, பசுமை பொருளாதாரம் கூட்டு பண்ணையம், நவீன தொழில் நுட்பத்தில் விவசாயம் செய்வது உள்ளிட்ட யூதர்களின் அறிவாற்றல், உள்ளிருப்பாற்றலையும் இந்நூல் மூலம் அறிந்து கொள்ளலாம். இஸ்ரேலின் ராணுவம், மொசாட்டின் உலகத் தொழில்நுட்பங்கள், உலக அளவில் இஸ்ரேலிய தொழில்நுட்பங்கள், இஸ்ரேலின் கல்வி, சமூக பொருளாதார சூழல், மொழி, இனம், பண்பாடு ஆகியவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். இஸ்ரேல் மீதான யூதர்களின் அதிதீவிர நாட்டுப்பற்று அங்குள்ள அரசியல் அமைப்பு, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை நம் கண்முன்னால் நிறுத்துகிறது இந்நூல். இந்த நூலை படிக்கும் போது, இஸ்ரேல் நாட்டை நேரடியாக சுற்றி வந்த அனுபவத்தை தருகிறது இந்நூல்.
இஸ்ரேல் – கே.ரமேஷ் பாபு
₹224
பைபிளின்படி யூதர்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட தேசம் இஸ்ரேல் என்பது யூதர்களின் நம்பிக்கை. கடவுளே தங்களது நாட்டுக்கான எல்லையை யூதர்களின் முன்னோரான மோசேக்கு வரையறுத்து கொடுத்ததாக பைபிள் கூறுகிறது. அதனால் தான், இஸ்ரேல் நாட்டை வாக்களிக்கப்பட்ட தேசம் என்றும் அதைச் சுற்றியுள்ள சிறு சிறு தேசங்களை புனித தேசங்கள் என்றும் யூதர்கள் அழைக்கின்றனர்.
Extra Features
- Book will be shipped in 3 - 7 days.
- Secure Payments
- To order over phone call 978606 8908
- Worldwide Shipping
- If the book is out of stock, you will be refunded.
Weight | 0.25 kg |
---|