கனவாகிப் போன கச்சத்தீவு – வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

290

கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தும், அது தொடர்ந்து மறுக்கப்படுவதுதான் பிரச்னைக்கு காரணம் எனக் கூறும் நூலாசிரியர், மீனவர்கள் பிரச்னை, இந்தியாவின் தெற்கு எல்லைப் பாதுகாப்பு போன்ற காரணங்களைக் கருத்தில்கொண்டு கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறார். கச்சத்தீவு பாரம்பரியமாக இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்பதை நிரூபிக்கும் ஏராளமான ஆவணங்களைத் தொகுத்து தந்துள்ளார் நூலாசிரியர். கச்சத்தீவு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விடைகளை அளிக்கிறது இந்த நூல்.

Add to Wishlist
Add to Wishlist

Description

கச்சத்தீவு தொடர்பாக நூலாசிரியர் எழுதிய நூலின் விரிவுபடுத்திய நான்காவது பதிப்பு. 1974-இல் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது. அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகாவுக்கும் இடையே இதுதொடர்பான ஒப்பந்தம் கையொப்பமானது என்கிற அளவில்தான் பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள். ஆனால், கச்சத்தீவு ஏன் தாரைவார்க்கப்பட்டது, இந்த விவகாரத்தில் அப்போது ஆட்சியில் இருந்த திமுக மீது இன்றளவும் வைக்கப்படும் விமர்சனங்கள், அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள், அப்போது நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற விவாதம் என நூலில் விளக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். 280 ஏக்கர் அளவிலான சிறிய தீவான கச்சத்தீவு, தமிழக மீனவர்களுக்கு மிகவும் முக்கியமானது. கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தும், அது தொடர்ந்து மறுக்கப்படுவதுதான் பிரச்னைக்கு காரணம் எனக் கூறும் நூலாசிரியர், மீனவர்கள் பிரச்னை, இந்தியாவின் தெற்கு எல்லைப் பாதுகாப்பு போன்ற காரணங்களைக் கருத்தில்கொண்டு கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறார். கச்சத்தீவு பாரம்பரியமாக இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்பதை நிரூபிக்கும் ஏராளமான ஆவணங்களைத் தொகுத்து தந்துள்ளார் நூலாசிரியர். கச்சத்தீவு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விடைகளை அளிக்கிறது இந்த நூல்.

Additional information

Weight0.25 kg