கடலோடிகள், உள்நாட்டு வெளிநாட்டு வணிகர்கள் குடிமக்கள் பற்றியெல்லாம் கதைக்காமல் மதரஸாபட்டின வரலாறு முழுமையாகாது. நடுவில் சில பக்கங்களைக் காணோம் என்பதுபோல தொடக்கத்தில் பல பக்கங்களைக் காணோம் என வரலாறு எழுதியுள்ளார்கள்.
‘மதரஸாபட்டினம்’ எனக் குறிப்பிட்டால் ஆய்வு செய்பவர்கள் ‘மதரஸா’ என்பது முஸ்லிம்களின் பாடசாலை என முடிவுக்கு வந்துவிடுவார்கள் என அஞ்சி ‘மதராஸபட்டினம்’ என எழுதுகிறார்கள். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி கோவில்களைப் பற்றி விரிவாக எழுதுவோர் மாற்றுமத வணக்கத்தலங்களைப் பற்றி துணுக்குச் செய்திகளையே தருகிறார்கள்.
நான்கு நூற்றாண்டுகளுக்குள் சுருக்கப்பட்ட சென்னை மாநகரின் வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நீள்கிறது. அந்த நீட்சியை ஆதாரங்களுடன் ஆய்வு செய்கிறது இந்நூல்.