மதுரை பதிப்பு வரலாறு (1835-1950) – பொ. ராஜா

350

ஒவ்வொரு துறை சார்ந்தும் வட்டார அளவிலனை ஆய்வுகள் விரிவடைந்தால்தான் தமிழ்ச் சமூகத்தின் பன்முகத்தன்மை வெளிப்படும். அச்சுத் தொழினுக்கும் பதிப்புக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே சென்னை மையமாக இருந்திருக்கிறது. அதேசமயம் பிற நகரங்களிலிருந்தும் பலர் பதிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்; அச்சகங்கள் செயல்பட்டிருக்கின்றன. ஆனால் வட்டாரம் சார்ந்தவை பெரிதும் கவனத்திற்கு வந்ததில்லை. அவற்றுக்கான ஆதாரங்களைக் கண்டடைவதற்கும் சேகரிப்பதற்கும் பெருமுயற்சி தேவைப்படுகிறது. அவ்வகையில் மதுரையைக் களமாகக் கொண்டு நடந்த பதிப்புச் செயல் ஈடுகளை விரிவாகத் தொகுத்து ஆராய்ந்துள்ள ராஜாவின் இவ்வாய்வு நூல் முன்னோடியாகத் திகழ்கிறது. நூல்கள், அச்சகங்கள், பதிப்பாசிரியர்கள், வெளியீட்டாளர்கள் எனப் பலவகையான தகவல்களை முறைப்படுத்த் ஆய்ந்துள்ளார். இத்துறையில் புதிய வெளிச்சத்தைத் தருவதோடு புதுப்பாதையையும் இந்நூல் காட்டியிருக்கிறது. – பெருமாள்முருகன்

Add to Wishlist
Add to Wishlist

Description

Additional information

Weight0.25 kg