Description
அண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்த படைப்புக்களில் மிகவும் தனித்துவமானது. வரலாறு, நாடகம் என்னும் ஊடகங்களிடையே கவிதையை ஓடவிட்டும், கவிதை, நாடகம், வரலாறு என்னும் இலக்கிய உருவங்களின் கலப்பாகவும் அவற்றின் உடைப்பாகவும் மண்பட்டினங்கள் அமைகின்றது. தமிழ்மக்களுக்கு அவர்களின் வரலாற்றுணர்வை ஏற்படுத்தவும், அதன்வழிவரும் எழுச்சியை பிரயோகப்படுத்துவதற்குரியதாக வழிகாட்டும் அரங்க அளிக்கையாகவும் இந்நூலை நிலாந்தன் ஆக்கித்தந்துள்ளார்.





























