Description
பல்லவர் காலம் தொடங்கி முற்கால பாண்டியர், பிற்கால சோழர் காலம் வரையிலும் மூதேவியின் வழிபாடு இருந்துள்ளது. தமிழகத்தை ஆட்சி செய்த அரசப் பெருமக்கள் மூதேவித் தாயைப் போற்றி வணங்கி வந்து உள்ளனர். செங்கற்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் நெடுஞ்சாலையில் வல்லம் என்னும் ஊரிலும் மேலும் ஒரு சில கோவில்களிலும் இன்றளவும் இவள் வழிபாட்டில் இருந்து வருகிறாள்!