Description
மொழிபெயர்ப்பை ஒரு கலையாக, மொழி வளர்ச்சியின் கருவியாக, உலகத்தோடு ஒட்டி உறவாடும் நெறியாக இன்றைய உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும், இயந்திர மொழிபெயர்ப்பும் இன்று நம் வசமாகி விட்ட போதிலும் இலக்கிய மொழிபெயர்ப்பை, கவிதை மொழிபெயர்ப்பைச் செய்வதற்குக் கவினுணர்வும், தொழில் திறனும் நம் வசப்பட்டாக வேண்டும்.
மையத்தின் அறிஞர் குழு உறுப்பினர்களில் ஒருவரும், ஆங்கில – தமிழ் மொழிக் கடலின் நிலை கண்டுணர்ந்தவரும், நாடு மெச்சும் நாவலரும், அரிய மொழிபெயர்ப்புக் கலைஞருமான டாக்டர் கா. செல்லப்பன், இந்தச் சிறந்த நூலை அனுபவச் செழுமையோடு உருவாக்கித் தந்துள்ளார்.






























