இராக் – ஆஃப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் போர் 9/11 தாக்குதலுக்கான எதிரொலிதான் என்பதன் மூலம் Ôதீவிரவாதத்துக்கெதிரான போர்Õ என்ற புதிய கலைச் சொல் உருவாகிவிட்டது. இது கோத்ரா ரயில் எரிப்பின் எதிர் வினையாகத்தான் குஜராத் இனக்கலவரம் நிகழ்ந்தது என்பதை நம்பும் அறியாமையை ஒத்துள்ளது.
இதைப்போலவே அமெரிக்காவின் உலகளாவிய தீவிரவாதத்திற்கெதிரான போருக்கான காரணத்தை பனிப்போரின் பின்னணியிலும் ஆங்கிலேயர்கள் அமெரிக்காவை ஆக்கிரமித்த வரலாற்றின் பின்னணியிலும் தேடவேண்டும் என்கிறார் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மஹ்மூத் மம்தானி.
இது எண்ணெய்க்கான ஏகாதிபத்தியப் போரா?
சமகால சிலுவை யுத்தமா? / நாகரிகங்களின் மோதலா?
நவீன காலனியாதிக்கச் சண்டையா?
இந்தக் கேள்விகளுக்கும் ரஷ்யாவுக்கு எதிராக ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட போராளிகள் (நல்ல முஸ்லிம்), எப்படி தீவிரவாதிகளாக (கெட்ட முஸ்லிம்) மாறினர் என்பதற்கும் இந்த நூல் விரிவாக பதில் தருகிறது.