நெடுநல்வாடை பதிப்பு வரலாறு (1889-2017) – முனைவர் அ.புவியரசு

200

பத்துப்பாட்டு பிரிவில் 7 -ஆவது நூல் நெடுநல்வாடை. இது தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாக்கி, நக்கீரரால் பாடப்பட்ட 188 அடிகளைக் கொண்ட பாக்களால் உள்ளது. போர் புரிய சென்ற தலைவனைப் பிரிந்ததால் வாடும் தலைவி, இருவருக்கும் ஏற்படும் மனநிலையை மையமாக்கிய பாடல்களாக உள்ளன. உ.வே.சாமிநாதையர் போன்றோரின் அயராத முயற்சியாலேயே இதுபோன்ற சங்கக் கால நூல்கள் அச்சு வடிவம் பெற்றன.

PAGE NO : 194

Add to Wishlist
Add to Wishlist

Description

பத்துப்பாட்டு பிரிவில் 7 -ஆவது நூல் நெடுநல்வாடை. இது தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாக்கி, நக்கீரரால் பாடப்பட்ட 188 அடிகளைக் கொண்ட பாக்களால் உள்ளது. போர் புரிய சென்ற தலைவனைப் பிரிந்ததால் வாடும் தலைவி, இருவருக்கும் ஏற்படும் மனநிலையை மையமாக்கிய பாடல்களாக உள்ளன. உ.வே.சாமிநாதையர் போன்றோரின் அயராத முயற்சியாலேயே இதுபோன்ற சங்கக் கால நூல்கள் அச்சு வடிவம் பெற்றன. அந்தவகையில் நெடுநல்வாடை பதிப்பித்த முறையையும், பதிப்பாளர் விவரங்களையும் 44 தலைப்புகளில் ஆவணங்கள் மூலமாகத் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர். மூன்று முறை பதிப்பிக்கப்பட்டாலும், தனிநூலாக 1931-இல் வை.மு.கோ. முயற்சித்துள்ளதாகவும், ஆனால், கு.கோதண்டபாணி பிள்ளையே அப்பணியை செய்துள்ளதாகவும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். உரையாசிரியர்கள் கருத்தின்படி சில முரண்பாடுகள் இருப்பதும், அதை சீர்படுத்திய முறையை நூலில் விளக்கியிருப்பதும் பாராட்டுக்குரியதாகும். நெடுநல்வாடை குறித்த அண்மைக்கால நூல்கள் வெளிப்படுத்திவரும் கருத்துகள் சரியா?, தவறா? என்ற கோணத்திலும் நூலாசிரியர் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கிய நூல்கள் ஆய்வு தற்போதைய இளந்தலைமுறையிடம் குறைந்து வரும் நிலையில், ஆய்வுக்கான தளத்தை எளிமைப்படுத்தும் வகையிலும், புதிய கோணத்தில் தமிழ்ச் சங்க இலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கான வழிகாட்டும் வகையிலும் இந்த நூல் அமைந்திருக்கிறது.

Additional information

Weight0.25 kg