பாறை ஓவியங்களைத் தேடிப் பயணம் – தொகுதி – 1

375

போர்க்காட்சிகள், தங்களின் இருப்பைப் பதிவு செய்த கை ஓவியங்கள், கொண்டாட்டங்கள், அன்றாடச் செயல்பாடுகள், வானியல் குறியீடுகள் போன்ற பல சுவையான காட்சிகளை உள்ளடக்கிய இவ்வோவியங்கள் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற முதன்மைப் பதிவாகும்.

Add to Wishlist
Add to Wishlist
Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

பாறை ஓவியங்களைத் தேடிப் பயணம்
தொகுதி – 1

ஆசிரியர்: பாலா பாரதி

தொல்மாந்தர்கள் தாங்கள் வாழ்ந்த குகைகளில் தீட்டி வைத்துள்ள ஓவியங்களைத்தான் பாறை ஓவியங்கள் அல்லது குகை ஓவியங்கள் என்கிறோம்.

போர்க்காட்சிகள், தங்களின் இருப்பைப் பதிவு செய்த கை ஓவியங்கள், கொண்டாட்டங்கள், அன்றாடச் செயல்பாடுகள், வானியல் குறியீடுகள் போன்ற பல சுவையான காட்சிகளை உள்ளடக்கிய இவ்வோவியங்கள் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற முதன்மைப் பதிவாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் இத்தகைய ஓவியங்களின் இருப்பு உலகிற்குத் தெரியவந்தது. 1980 இக்கும் பிறகே இவை தமிழகத்திலும் உள்ளன என நமக்குத் தெரிந்தது. இவ்வோவியங்களைக் காண நாம் தொடர்ந்து பயணித்து வருகிறோம். அவற்றின் ஒரு பகுதியை பயணங்களின் வாயிலாகவே வழங்கியுள்ளோம்.

பொருளடக்கம்

  1. வெள்ளரிக்கோம்பை
  2. கரிக்கியூர்
  3. கொணவக்கரை
  4. ஏர்பெட்
  5. கோவனூர்
  6. குமுட்டிபதி
  7. மதகடிப்புதூர்
  8. எழுத்தளை, தேன்வரந்தை
  9. சிறுமலை
  10. அஞ்சுகுழிப்பட்டி
  11. கோழியூத்து
  12. கோம்பைக் காடு
  13. அணைப்பட்டி
  14. நரிஅலை, மாயவர் மலை
  15. மயிலாடும் பாறை, மாயவர் மலை
  16. சின்ன அளை, மாயவர் மலை
  17. கரடிக்கூட்டம்
  18. சித்தரேவு
  19. வாக்கரிசிப்பாறை, வடகாடு
  20. சித்திரக்கல் புடவு, அருகவேலி
  21. கல்புடவு, முருக்கோடை
  22. சாமியார் புடவு, சுந்தரராஜபுரம்
  23. காமயக்கவுண்டன்பட்டி
  24. மூணாண்டிப்பட்டி
  25. பெருமாள்மலைச் சுனை
  26. புருடையான் பாறை
  27. பக்குப்புடவு, வண்டியூர்
  28. பூச்சிக்கல் புடவு
  29. முருகமலை
  30. கீழவளவு
  31. திருவாதவூர்
  32. புத்தூர் மலை
  33. நரிப்பள்ளி பொடவு, புத்தூர் மலை
  34. கொங்கர் புளியங்குளம்
  35. கருங்காலக்குடி
  36. அழகர் மலை
  37. கீழக்குயில் குடி, வடகரைப் பாறை
  38. கீழக்குயில் குடி, ஆடுச்சான் பாறை
  39. முத்துப்பட்டி
  40. நடுமுதலைக்குளம்
  41. சித்திரக்கல் புடவு, வாசிமலை
  42. பெத்தான் கல், வாசிமலை
  43. தேவன்குறிச்சி மலை
  44. வயித்துப்பாறை, கௌரிமலை
  45. புலிப்புடவு, மூணுமலை
  46. சாஸ்தா கோயில், மூணுமலை
  47.  பூசாரிப்பட்டி, மேலூர்
  48. புலிப்பட்டி
  49. ஆம்பல்குடி மலை
  50. தேன்தட்டுப்பாறை, சஞ்சீவி மலை
  51. திருமலை
  52. தேவர்மலை
  53. குடுமியான்மலை
  54. திருமயம்
  55. ஆளுருட்டிமலை
  56. மலையடிப்பட்டி
  57. ஆட்டுக்காரன்பட்டி
  58. கட்டுரை -1
  59. கட்டுரை -2

ஆசிரியர் உரை:

“பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தாங்கள் பார்த்தவைகளில் தங்களைக் கவர்ந்தவைகளை, அச்சுறுத்தியவைகளைத் தாங்கள் வாழ்ந்த குகையின் பாறைகளில் ஓவியங்களாகத் தீட்டி வைத்துள்ளனர். இத்தகைய ஓவியங்களைத்தான் பாறை ஓவியங்கள் அல்லது குகை ஓவியங்கள் என்கிறோம். ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என உலகின் பல பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இத்தகைய ஓவியங்கள் இந்தியாவிலும் காணப்படுவது சிறப்பு. தமிழகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் தீட்டப்பட்டுள்ள இவ்வோவியங்களைக் காண நாம் தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளாகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய பயணங்களின் வாயிலாக நாம் கற்றுக்கொண்டது ஏராளம் என்றுதான் கூறவேண்டும். ஒவ்வொரு பயணத்திலும் பல வகையான அனுபவங்கள் கிட்டின. நம்மை இயக்கத்துடனும் உயிர்ப்புடனும் வைத்திருக்கும் இத்தகைய பயணங்களின்போது, அவ்விடத்தில் காணப்படும் தொல்லியல் சான்றுகள், அங்குள்ள மக்களின் பண்பாடு, அங்குக் காணப்படும் பறவைகள், விலங்குகள், தாவரங்கள் எனப் பல கூறுகளையும் நாம் பதிவு செய்து கொள்வதுண்டு. இவற்றையெல்லாம் தனித்தனியாகத் தொகுத்துப் புத்தகங்களாக எழுத எண்ணியிருந்த நமக்கு நேரம் கைக்கூடாமல் இருந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட ‘கொரோனா’ தீ நுண்மத்தின் காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டிய வாய்ப்பைப் பயன்படுத்தி எழுதிய புத்தகங்களில் ஒன்றுதான் இப்புத்தகம்.

தமிழகத்தில் காணப்படும் பாறை ஓவியங்களை ஓரளவிற்குப் போய் பார்த்துப் பதிவு செய்துள்ளோம். முழுமையடைந்தவுடன் புத்தகமாக எழுதலாமென்றால், அது முழுமையடைய வாய்ப்பில்லைப் போலத் தெரிகிறது. ஏனெனில், புதிது புதிதாக வெவ்வேறு இடங்களில் பாறைஓவியங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, ‘இதுவரைப் போய்ப் பார்த்த பாறை ஓவியங்களை முதலில் இரு தொகுதிகளாக வெளியிட்டுப் பின்னர் அடுத்தடுத்த புத்தகங்களில் மற்றவைகளைப் பதிவிடலாமே!’ என்ற நண்பர்களின் அறிவுரையும் சரியாகப்பட்டது நமக்கு. பொதுவாக ஒரு பாறை ஓவியம் இருக்கும் இடத்திற்குச் சென்றால் அதை முறைப்படிப் பதிவு செய்து கொள்வோம். அவ்விடத்தின் புவியியல் குறியீடுகள், இடத்தின் அமைப்பு, பாறையின் தன்மை, ஓவியத்தின் அளவு, நிறம், பயன்படுத்தப்பட்ட பொருள்கள், வரையப்பட்ட உருவங்கள், குறியீடுகள் போன்ற அனைத்து விதமான கூறுகளையும் பதிவு செய்வதுடன், இவற்றை நம் கைப்பட வரைந்தும் படமெடுத்தும் வைத்துக் கொள்வோம். வாய்ப்பிருந்தால் அங்கிருக்கும் மக்களிடம் அவ்விடத்தைப் பற்றி அவர்களின் கருத்தை ஒலிப்பதிவாகப் பதிந்து கொள்வோம். ஆரம்பத்தில், இவ்விடங்களுக்குச் செல்லும்போது ஓர் ஓவியரையும்கூட அழைத்துச் சென்று அவ்வோவியங்களை வரைந்து வைத்துக் கொள்ள வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், நாம் போகுமிடமெல்லாம் ஓர் ஓவியரை அழைத்துச் செல்வது இயலாததாகப் போகவே, ஒரு யோசனை தோன்றியது. ‘ஏன் நாமே வரைந்து வைத்துக் கொள்ளக்கூடாது?’ இப்புத்தகத்தில் நாம் காட்டியுள்ள கோட்டோவியங்கள் யாவும் அவ்வவ்விடங்களில் நாமே வரைந்தவை. …..

தமிழகத்தில் நாம் பயணப்பட்டுக் கண்ட பாறை ஓவியங்களைப் பயணங்களின் வாயிலாகவே தங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியே. நன்றி” – ” பாலா பாரதி

Weight0.400 kg