இந்நூல் சங்ககால ஆரம்பத்திலிருந்து சிலப்பதிகார காலம் வரையிலான தமிழ்ச் சமூகத்தின் நாடகம் பற்றிப் பேசுகிறது. உண்மையில் இந்நூல் தமிழ்ச் சமூகத்தின் நாடகத்தை, நாடகச் சூழலை, நாடகக் கலைஞரை, நாடகப் பண்பாட்டை அவற்றின் சமூக வரலாற்றினூடாக ஆராய்கிறது. தமிழ் நாடகத்தின் பலங்களை, பலவீனங் களை விளங்கிக் கொள்ளக் கிரேக்க நாடகத்துடன் அதை ஒப்பிட்டாராய்கிறது. இந்நூலை வாசிக்கும் ஒருவர் பண்டைய கிரேக்கத்தின் வரலாற்றினூடாக அதன் திரஜெடி, கொமெடி மற்றும் சற்றர் நாடகங்கள் என்பவற்றை விளங்கிக் கொள்வதுடன் குறிப்பிட்ட காலத்தில் தமிழ் நாடகத்தின் தோற்றம், வளர்ச்சி, மாற்றங்கள் என்பவற்றையும் தமிழ்ச் சமூகத்தின் சமூக வரலாற்றினூடாக அறிந்துகொள்ளலாம். அத்துடன் கிரேக்கத்தினதும், தமிழ்நாட்டினதும் சமூகங்களின் பண்பாடு/ வாழ்வியல் என்பன அவ்வச் சமூகங்களின் நாடகங்களை வடிவமைத்த முறைமையையும் இந்நூலின் ஊடாக புரிந்து கொள்ளலாம். இந்நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு பல வருடங்களாகியும் இதிற் பேசப்பட்ட விடயங்கள் இன்னமும் தமிழ்மொழியில் வேறு ஆசிரியராற் பேசப்படவில்லை என்பதே இந்நூலின் மிகப்பெரும் பலமாகும்.
பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்
₹350
இந்நூல் சங்ககால ஆரம்பத்திலிருந்து சிலப்பதிகார காலம் வரையிலான தமிழ்ச் சமூகத்தின் நாடகம் பற்றிப் பேசுகிறது. உண்மையில் இந்நூல் தமிழ்ச் சமூகத்தின் நாடகத்தை, நாடகச் சூழலை, நாடகக் கலைஞரை, நாடகப் பண்பாட்டை அவற்றின் சமூக வரலாற்றினூடாக ஆராய்கிறது.
Extra Features
- புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
- தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
- Worldwide Shipping
- புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.