தொன்மையான நதிக்கரையின் நாகரிகத்தின் வரலாற்றையும், பண்பாட்டு நிகழ்வுகளையும் இந்நூலின் ஆசிரியர் அப்பணசாமி சுருக்கமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
நாட்டார் கதைப்பாடல்கள், அவற்றில் வெளிப்படும் நாட்டார் தெய்வங்களின் மூலப் பிறப்பியல், சமூகப் பின்னணி அனைத்தும் கதை சொல்லும் பாணியில், தமிழ்ச் சமுதாயத்தின் முந்தைய வாழ்க்கை நிலையைப் புரிய முடிகிறது. இதிகாசப் புராணங்களின் கதாபாத்திரங்களோடு இணைத்துச் சொல்லப்பட்டாலும், கிராமப்புறச் சாதிக் கட்டுக்கோப்புகளில் பிணைந்திருக்கும் கொடூரங்களை உணர வைக்கிறது.