பிராமண மதம் தோற்றமும் வளர்ச்சியும்-ஜோசப் இடமருகு

190

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

Piramana Matham Thotramum Valarchiyum

பிராமண மதம் தோற்றமும் வளர்ச்சியும்-ஜோசப் இடமருகு

ஹரிஹர மதம்:

சைவ மதம், வைணவ மதம் ஆகியவற்றின் பிரச்சாரம் ஏறத்தாழ சம அளவில் இருந்தது. வைணவ மதம் வட இந்தியா வில், குறிப்பாக வட மேற்குப் பிரதேசங்களில் தான் முதலில் வலிமையடைந்தது. அது பிறகு மற்ற இடங்களுக்கும் பரவியது. அதற்கு முன்பே தென்னிந்தியாவிலும் கிழக்கிந்தியாவிலும் சைவ மதம் வலிமை பெற்று விட்டது. இரண்டு மதங்களுடைய புரோகிதர்களும் பார்ப்பனர்கள் தான். இரண்டு மதங்களும் பல கோத்திர சங்கல்பங்களையும் ஆச்சாரங்களையும் உட்கொண்டே வளரவும் செய்தன. எனினும் பல இடங்களிலும் இந்த இரு மதங்களும் மோதிக் கொண்டன. சிவ பக்தர்களான மன்னர்கள் விஷ்ணு பூசையை தடை செய்தனர்; விஷ்ணு பக்தர்கள் சிவ பூசையை தடை செய்தனர். இவ்வாறு பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. சில இடங்களில் சிவன் கோயில்கள் அழிக்கப் பட்டன; நேர்மாறாகவும் நிகழ்ந்தன. இந்த மதக் கலகங்களுடைய காலத்தில் ஹரியையும் (விஷ்ணு) ஹரனையும் (சிவன்) ஒன்றிணைத்து ஹரிஹரன் என்ற புதிய கடவுளைப் படைக்கவும் பார்ப்பனர்கள் முயன்றனர். ஹரியும் ஹரனும் சேர்ந்து நடத்திய இயற்கைக்கு மாறான உடல் சேர்க்கையால் உண்டான ஒரு கடவுளையும் (அய்யப்பன்) அவர்கள் கேரளத்தில் படைத்தனர்.

பார்ப்பன மதத்தின் கோஷங்கள்:

பார்ப்பனர்கள் பூசை முதலிய சடங்குகளுக்குப் பயன்படுத்துகின்ற மந்திரங்களல்லவா அதர்வ வேதத்தில் உள்ளவை. அதிலுள்ள பல சூக்தங்களும் பகைவர்களுக்கு எதிரான கோஷங்கள் ஆகும். சில எடுத்துக்காட்டுகளை மட்டுமே கீழே தருகின்றேன்:

”எவனொருவன் வானையும் பூமியையும் வெளிப்படுத்தி யிருக்கின்றானோ, எவனொருவன் அகில உலகங்களையும் காக் கின்றானோ, எவனொருவனில் அந்தப் பூமியும் திசைகளும் அடங்கியிருக்கின்றனவோ, கோபமயமான அந்தச் சூரியனை யார் அவமானப்படுத்துகின்றார்களோ, யார் ஞானிகளான பிராமணர்களைத் துன்புறுத்துகின்றார்களோ, ஹே, நோயின் தேவா! அவனை நீ அச்சுறுத்து.

‘எந்தவொரு தேவதையுடைய ஒளியால் ருதுக்களுக்கு

அனுசரணையாக காற்று இயங்கவும் கடல் பொங்கவும்

செய்கின்றதோ, கோபத்தால் நிறைந்திருக்கின்ற அந்தச் சூரியனைஎவனொருவன் அவமானப்படுத்துகின்றானோ, எவனொருவன் ஞானியான பிராமணனைத் துன்புறுத்துகின்றானோ, ஹே, நோயின் தேவா! அவனைச் சோர்வடையவும் கட்டுக்குள் ளாக்கவும் செய்வாயாக!”

அதர்வ வேதம் 13 ஆம் காண்டம் 3 ஆம் சூக்தத்திலுள்ள முதல் இரு சுலோகங்களின் மொழி பெயர்ப்புகளே மேலே கொடுக்கப்பட்டுள்ளவை. 26 சுலோகங்களுள்ள அந்த சூக்தத்தில் 25 சுலோகங்கள் பார்ப்பனர்களைத் துன்புறுத்துபவர்களை பழிவாங்க வேண்டும் என்ற கோரிக்கையுடனேயே முடிகின்றன. இத்தகைய மந்திரங்கள் வேறு பலவும் உள்ளன. பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்ட அவர்கள் எவ்வளவு தூரம் உற்சாகம் காட்டினர் என்பதை இது தெளிவாக்குகின்றது.

விலை:190/-

வெளியீடு-அலைகள்