புலம்பெயர்ந்த தமிழர்: வரலாறும் வாழ்வியலும் – கோ. விசயராகவன், முனைவர் கு. சிதம்பரம்

140

Add to Wishlist
Add to Wishlist

Description

தோரணவாயில்:

இந்தியாவின் சிட்னி எனஅழைக்கப்படும் சிறிய தீவான சிங்கப்பூர் தமிழ் நாட்டின் தென்கிழக்கே 1500 மைல் தொலைவில் உள்ளது. இந்நகரம் ஒருதுறைமுக நகரமாகும்.
தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். சிங்கப்பூரிலுள்ள புலம்பெயர்ந்தவர்களின் வரலாற்றை வரைவான் புகுகின்றேன்.

புலம் பெயரக் காரணங்கள் :

எந்த ஒரு செயலுக்கும் முக்கியக் காரணம் உண்டு. தாம் பிறந்த நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்குக் குடியேறி வாழ்பவர்களையே புலம் பெயர்ந்தோர் என்பர்.

1. ஆங்கிலேயர்கள் தங்களின் அனைத்து வேலைகளுக்கும் கூலித் தொழிலாளர்களாகத் தாம் வெற்றி கொண்ட நாட்டு மக்களை தத்தம் நாடுகளுக்கு அடிமைகளாகக் கொண்டு சென்றனர்.

2. சிலர் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு இணங்கவும்; வாணிகம் செய்வதற்கும்; பொருளாதார மிகுதியாலும், புதிய இடங்களைத் தம் வயப்படுத்தி உரிமை கொண்டாடவும் புலம் பெயர்ந்தனர். புலம் பெயர்ந்த நாட்டின் சூழல்; வளம் பிடித்துப் போக அங்கேயே தங்கிவிட்டனர்.

3. இக்காலத்தில் கல்வி கற்றவர்கள் மிகுந்த பொருளைப் பெற வேண்டி புலம் பெயர்கின்றனர்.

4. அரசர்களும் தங்கள் ஆட்சியைப் பரப்பவும் பிறநாட்டு வளங்களைத் தம் வயப்படுத்தவும் வெற்றி பெற்ற மக்களைத் தம் நாடுகளுக்கு அடிமைகளாகக் கொண்டு வந்தனர்.

Additional information

Weight0.25 kg