இராசேந்திர சோழனின் ஐம்பதாண்டுக் கால எழுத்துலக வாழ்வினை, இயக்கச் செயல்பாட்டினைக் குறுக்கும் நெடுக்குமாக விசாரணை செய்வதாகவும் இதுவரை எவராலும் சொல்லப்படாத, திறக்கப்படாத கதையுலகின் சூட்சுமம், நுட்பம், கதை உருவாக்கம், வடிவ நேர்த்தி, கதையின் நுண்ணரசியல் அதன் ரகசியம் என்று மனம் திறந்த நிலையில் பேசுவது இரா. சோ. வின் கதையுலகிற்குப் புதுப் பரிமாணம் தரக் கூடியதாகப் புது ஒளி பாய்ச்சுவதாக உள்ளது.
இலக்கியத் தடம் அறிந்து, தமிழ்ப் புனைகதையுலகில் முத்திரை பதிக்க நினைப்பவர்களுக்குத் தமிழ்ச் சமுகத்தின் மீது அக்கறை கொண்டவராக மாறுவதற்கு இராசேந்திர சோழன் நேர்காணல்கள் ஒரு தூண்டுகோலாக அமையக் கூடும்.