ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் அரசியல் சாசனம் மற்றும் தேசிய கொடிக்கு என்றுமே விசுவாசமாக இருந்ததில்லை.
இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைத் தன்மைகளான ஜனநாயகம், கூட்டாட்சி மற்றும் மதச்சார்பற்ற இந்தியா நிலைத்திருப்பதை வெளிப்படையாகவே எதிர்க்கும் ஒரு இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். ஹிட்லர் மற்றும் முசோலினி போன்ற சர்வாதிகாரிகளை வணங்கும் ஒரு நீண்ட பாரம்பரியம் அதற்கு இருக்கிறது.
ஆங்கிலேய அரசிற்கு எதிரான சுதந்திர போராட்டத்தை வெளிப்படையாக எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல் தேசத்தின் விடுதலைக்காக தங்களின் உயிரை நீத்த போராளிகளான பகத்சிங் மற்றும் அவரின் கூட்டாளிகளின் தியாகத்தையும் நகைப்பிற்குரியதாக கருதும் ஒரு இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசப்பற்று மற்றும் தேசத்தின் மீதான அவர்களின் விசுவாசத்தை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்நூல்.