இந்தப் புத்தகம் புராண காலத்திலிருந்து நவீன காலம் வரை நாடார்களின் வரலாறு அலசுகிறது. அதன் மூலம் தமிழர்களின் முன்னேற்றத்திற்கான பாதையை கட்டமைக்கிறது.
இந்த நூல் பிரிவினை வாதங்களை அழித்து ஒழிக்கும் எதிர்வாதங்கள் ஏராளம் அடங்கியது. சாதி என்பது ஒரு மனித குழுவினர் இன்னொரு பகுதியினரைக் சுரண்டி சுகவாழ்வு அமைக்கும் முயற்சியில் ஒரு உத்தி என்பதை வரலாறு காட்டுகிறது.
சாதிய தடைகளில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்ட இந்த வகுப்பினர் சாதியை ஒழிக்கும் சமரசத்தில் ஒரு அடிப்படை உந்து சக்தியாகும் வல்லமை உடையவர்கள் என்பதை இந்தப் புத்தகம் முன்வைக்கிறது.
சாதிகள் மாறி வந்துள்ளன என்பதையும் சாதி மாற்ற நாடகத்தில் பொருளாதார காரணிகள் எப்படி இணைந்து செயல்பட்டு உள்ளன என்பதையும் அருமையாக விளக்கியுள்ளார்.
இந்த மாற்றங்களுக்கெல்லாம் தொழில்நுட்பம் ஒரு காரணியாக அமைந்தது. தொழில்நுட்பத்திலிருந்து வணிக ஆதிக்கம் ஏற்பட அதிலிருந்து அரசியல் ஆதிக்கம் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
ஒரு சாதி மட்டும் தனித்து ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடியாது தாம் வாழும் நிலத்தில் உள்ள பிற மக்களோடு இணைந்து ஒரே மக்களாக தான் அந்த எல்லைக்கு அப்பால் செய்யவும் செல்ல முடியும் என்ற எதிர்கால பாடத்தையும் இந்த புத்தகம் கொண்டுள்ளது.
– முனைவர் தி.கருணாகரன் தனது முன்னுரையில் இருந்து..