கோத்திரங் கள் குறித்த செய்திகளைப் பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்:
1. பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகியோருக்கு மட்டும் தொடக்க காலத்தில் கோத்திரங்கள் இருந்தன.
2. சூத்திரர்களுக்கு கோத்திரங்கள் இல்லை. அவர்களுக்கு கல்வி முறை இல்லாததால் கோத்திரம் இல்லை என்ற கருத்தும் உள்ளது.
3. சாதிகள் பலவாறு வேறுபட்டதாயினும் கோத்திர முறைகள் ஒன்றாக உள்ள நிலையும் உள்ளது.
4. திருமண நிகழ்வுகளில் ஒரே கோத்திரத்தில் பெண் கொடுத்தல், பெண் எடுத்தல் என்ற முறைகள் கிடையாது.
5. பிறப்பு, திருமணம், இறப்பு முதலான சடங்கு நிகழ்வுகளில் அந்தணர்களால் கோத்திரங்கள் கேட்கப்பட்டு அவர்களுக்கு சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன.
6. பண்டைக் காலத்தில் கோத்திரங்கள் தெரியாதவர் காசியப கோத்திரத்திம் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டு காசியப கோத்திர மாகக் கருதப்படுவர்