டிசம்பர் 6, 1992, அயோத்தியா நிகழ்ச்சிக்குப் பிறகு நாம் நேரடியாக யுத்த களத்தில் குதித்து விட்டோம்.
இந்தப்போர் மூன்று விதமாக நடைபெறுகிறது. ஹிந்துத்துவ சக்திகள் ஒருபுறமும், அதற்கு எதிரானோர் மறுபுறமும் உள்ளனர்.
1. கருத்து ரீதியான போர்.
2. அரசியல் ரீதியான போர்.
3. இயக்க ரீதியான போர்.
இதில் ஆயுதமேந்த வேண்டி வரும். நமது தரப்பில் சிலபேரும், எதிரிகள் தரப்பில் சில பேரும் மடியலாம். யோசிப்பதற்கோ, பின்வாங்குவதற்கோ நேரமில்லை. இறுதி வெற்றி நமக்கே!
சுதர்சன், முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் (கடலூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் பேசியது) வெறும் தகவல்களை தருவதும் பொழுதைப் போக்குவது மட்டும் இந்நூலின் நோக்கமல்ல. நாடு முழுவதும் ஃபாஸிஸத்திற்கும் மக்களுக்கும் இடையே நடந்து வரும் போராட்டத்திற்கு வலுசேர்க்கவும் இந்திய ஜனநாயகத்தின் மாண்புகளை சீர்குலைக்கும் சக்திகளை சாதாரண மக்களுக்கு அடையாளம் காட்டவும் இந்நூல் உதவும்.