செம்பியன் மாதேவி வாழ்வும் பணியும் – பொ.இராசேந்திரன் சொ.சாந்தலிங்கம்

120

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

செம்பியன் மாதேவியார் பற்றிய முதல் குறிப்பு திருச்சிக்கு அருகில் உள்ள உய்யக் கொண்டான் திருமலை என்னும் ஊரில் உள்ள உஜ்ஜிவ நாதர் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது.

கி.பி.941 ஆம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு பராந்தக சோழரின்34 ஆம் ஆட்சியாண்டிற்குரியது. இக்கல்வெட்டில் பிராந்தகன் மாதேவடிகளார் திருக்கற்றளி பரமேஸ்வரர் என்னும் இக்கோயிலுக்கு நந்தாவிளக்கு எரிப்பதற்காக ஆடுகள் கொடையளித்த செய்தி இடம் பெறுகிறது. உய்யக்கொண்டான் திருமலையின் முன்னைப் பெயர் நந்திபன்மமங்கலம் என்பதும் இக்கல்வெட்டில் அறியப்படுகிறது.

செம்பியன் மாதேவியாரின் இறுதிக் கல்வெட்டாக இராசராசனின் 16ஆம் ஆட்சியாண்டில் (1001 கி.பி.) காண்கிறோம். எனவே கி.பி. 941 முதல் கி.பி. 1001 வரை சுமார் 60 ஆண்டுகள் எனும் மிக நெடிய கால அடைவில் செம்பியன் மாதேவியார் பல அரிய திருப்பணிகளை ஆற்றியுள்ளார். அவரது கணவர் சிவநெறிச் செல்வரான கண்டராதித்தர் பாடிய திருவிசைப்பா திருமுறைகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது. 9ஆம்

பணிகளை மாதேவியாரின் செம்பியன் நாம் மூன்றுவிதமாகப் பகுத்துக் காணலாம். முதலாவதாக செம்பியன் மாதேவியார் புதிதாகக் கட்டிய கோயில்களும், ஏற்கனவேயிருந்த செங்கல் தளிகளைக் கற்றளிகள் ஆக்கியதும்.

இரண்டாவதாக ஏற்கனவே இருந்த கோயில்களில் இவர் செய்த திருப்பணிகளும், புதிதாக எடுத்த பகுதிகளும், புதிய சிற்பச் சேர்க்கைகளும்.

மூன்றாவதாக இவர் கட்டிய கோயில்களுக்கும், முன்னரே கட்டப்பட்டிருந்த கோயில்களுக்கும் இவர் கொடுத்த அளப்பரிய கொடைகள் பற்றிய செய்திகள் என மூன்று பகுதிகளாக இவரது அருள் பணிகளை ஆராயலாம். இவர் கட்டிய கோயில்களாவன

1. கோனேரிராஜபுரம் – உமாமகேஸ்வரர் கோயில்

2. ஆடுதுறை – திருக்குரங்காடுதுறை மகாதேவர் கோயில்

3. திருக்கோடிக்காவல் – திருக்கோட்டீஸ்வரர் கோயில்

4.குத்தாலம் – சோழீஸ்வரர் கோயில்

5. செம்பியன் மகாதேவி -கைலாசநாத சுவாமி கோயில்

6.ஆனாங்கூர் – அகஸ்தீஸ்வரர் கோயில்

7. திருவாரூர் – திருஅறநெறி

8.மயிலாடுதுறை – மாயூரநாதர் கோயில்

9. திருவக்கரை – சிவலோகம் உடையார் கோயில்

10. வடதிருமுல்லைவாயில் – மாசிலாமணி ஈஸ்வரர் கோயில்

11.விருத்தாச்சலாம் – விருத்தகிரீஸ்வரர் கோயில் (திருமுதுகுன்றம்)

மேற்கண்ட கோயில்கள் தவிர செம்பியன் மாதேவிப் பாணியைக் கொண்ட கோயில்கள் எனக் கீழ்க்கண்ட கோயில்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அவையாவன.

1. திருவேள்விக்குடி மணவாள ஈஸ்வரர் கோயில்

2. திருப்புறம்பியம் -ஆதித்தேஸ்வரர் கோயில்

3. கருந்தட்டாங்குடி – வசிஸ்டேஸ்வரர் கோயில்

இத்தகைய கோயில்களை ஆய்வதன் மூலம் செம்பியன் மாதேவியாரின் கலைத் தொண்டையும். கலையில் அவர் கொண்டிருந்த காதலையும் சிவநெறியில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டையும் ஒருங்கே உணரலாம்.

இவரது கொடைகளைப் பெற்ற ஊர்களாகக் கீழ்க்கண்ட ஊர்களைக் கருதலாம். அவையாவன: காரடி. திருநரையூர், வடதிருமுல்லைவாயில். கொல்லிமலை, திருவிடந்தை, தென்னேரி திருவெண்காடு, திருமழபாடி, திருவாலங்காடு, திருவெண்ணைநல்லூர். கருந்தட்டாங்குடி,கோபுரப்பட்டி,திருவிடைமருதூர், கீழ்ப்பழுவூர்,திருமங்கலம். திருப்புறம்பியம். கோவிந்தபுத்தூர்,கோயில் தேவராயன் பேட்டை ,திருவேள்விக்குடி,காமரசவல்லி, நாகப்பட்டிணம், திருக்களித்திட்டை திருவிசலூர், திருவோத்தூர் போன்றவையாகும்

Weight0.4 kg