சிலப்பதிகார விருந்து – பேராசிரியர் மோனிவர். நா. சஞ்சீவி

200

குடிமக்கள் காப்பியமான ‘தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேரும் சிலப்பதிகாரத்தையும்’ அதன் உரைகளையும் எத்தனை முறை வாசித்தாலும் சலிப்பதில்லை. சிலப்பதிகாரத் தேன், சிலப்பதிகார விருந்து என்ற ந.சஞ்சீவியின் இரு நூல்களை, அவற்றின் 23 கட்டுரைகளை ஒரே நூலாக்கி வெளியிட்டுள்ளனர்.

‘திங்களைப் போற்றுதும், மங்கல வாழ்த்துப் பாடலை எடுத்து நாட்டுப்பற்றை விளக்கும் ஆசிரியர், ஒவ்வொரு கட்டமாகத் தொடர்கிறார்; செங்கோல் தென்னவர் காக்கும் நாடென கோவலன் பக்தியையும் தேச பக்திக்குச் சோதனை பற்றிய கட்டுரையில் கண்ணகியின் பக்தியையும் யானோ அரசன், யானே கள்வன்… கெடுக என் ஆயுள்’ எனப் பாண்டியனின் பக்தியையும் விவரிக்கிறார்.

No. of pages: 192

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

குடிமக்கள் காப்பியமான ‘தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேரும் சிலப்பதிகாரத்தையும்’ அதன் உரைகளையும் எத்தனை முறை வாசித்தாலும் சலிப்பதில்லை. சிலப்பதிகாரத் தேன், சிலப்பதிகார விருந்து என்ற ந.சஞ்சீவியின் இரு நூல்களை, அவற்றின் 23 கட்டுரைகளை ஒரே நூலாக்கி வெளியிட்டுள்ளனர்.

‘திங்களைப் போற்றுதும், மங்கல வாழ்த்துப் பாடலை எடுத்து நாட்டுப்பற்றை விளக்கும் ஆசிரியர், ஒவ்வொரு கட்டமாகத் தொடர்கிறார்; செங்கோல் தென்னவர் காக்கும் நாடென கோவலன் பக்தியையும் தேச பக்திக்குச் சோதனை பற்றிய கட்டுரையில் கண்ணகியின் பக்தியையும் யானோ அரசன், யானே கள்வன்… கெடுக என் ஆயுள்’ எனப் பாண்டியனின் பக்தியையும் விவரிக்கிறார்.

பத்தினி சாபமிட்ட காட்சியுடன் முன்னும் பின்னுமானவற்றையும் விவரிக்கும் சஞ்சீவி, மதுரையில் தீக்குக் கண்ணகி இட்ட கட்டளையின்வழி அவளுடைய மக்கள் பற்றைப் பறை சாற்றுகிறார். மன்னவர் வஞ்சினமும் மக்கள் வாழ்த்தும், வட நாட்டில் தமிழர் படை போன்ற இயல்களில் மிகச் சிறந்த பாடல்களை எடுத்து விளக்கும் ஆசிரியர், வெற்றி முழக்கும் வீர வழிபாடும் இயலில் வேந்தன் வரவை வாழ்த்தும் நால்வகை நிலங்களின் பாடலைச் சிறப்பிக்கிறார்.

இளங்கோ இதயத்தில், சிலம்பில் இளங்கோவடிகளின் மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் எடுத்துக்காட்டுகிற பரல்கள் போன்ற வரிகளைத் தேர்ந்தெடுத்துத் தருகிறார்.

சிலம்பின் சிறப்பு, குறிக்கோள், புகழ் எனப் பேசி, அரசியல் துறையிலும் இலக்கியத் துறையிலும் ஆன்மிகத் துறையிலும் தமிழ் மக்கள் ஒற்றுமையையே உயிர்நாடியாகக் கொண்டு உய்ய வேண்டும் என்பது இளங்கோவடிகள் கண்ட பெருங்கனவு என்று நிறைவு செய்கிறார் ஆசிரியர். சிலம்பின் பாடல் வரிகள் சித்தரிக்கும் காட்சிகள் ரசனைக்குரியவை. படிக்கப் படிக்கப் புதிய பொருள்களைத் தருபவை. ந. சஞ்சீவியின் எழுத்துகளும் அந்த அனுபவத்தைத் தரத் தவறவில்லை.

No. of pages: 192
Weight0.25 kg