நாட்டுப்புற விளையாட்டுகள்
“நாட்டுப்புறஇயல் பற்றிய ஆராய்ச்சியில் வாய்மொழி இலக் கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தினைப் பெறுவது ‘நாட்டுப்புறக் கலைகள்” எனலாம். நாட்டுப்புறச் சமுதாயப் பழக்க வழக்கங்களைப் பற்றியோ, புழங்கு பொருளால் அறியப்படும் பண்பாடுகள் பற்றி யோ ஆய்வு அவ்வளவாக வளரவில்லை”” எனலாம். எனவே, நாட்டுப்புறச் சமுதாயப் பழக்க வழக்கங்களை உள்ளடக்கிய ‘வாழ்வியல்’ தொடர்பான ஆய்வு தேவையாகிறது. ஆதலின், ‘வாழ்வியல்’ கூறான ‘நாட்டுப்புற விளையாட்டுகள்’ பற்றிய ஆய்வும் இன்றியமையாதது ஆகிறது.
”’விளையாட்டு’ என்பது வாழ்க்கைக்குப் பயிற்சியளிக்கும் களமெனக் கூறலாம்.”” எனவே, இக்களத்தினைக் கொண்டு அவர்தம் வாழ்க்கையினை ஊடுருவி நோக்குவது எளிதெனலாம்.
இலக்கியங்களில் இடம்பெறும் விளையாட்டுகளை நாட்டுப் புற விளையாட்டுகளுடன் இணைத்துப் பார்க்கும்போது பழைய பழக்கவழக்கங்கள் பற்றிய செய்திகள் புலனாகலாம்.
மேலும், ஒருநாட்டின் இயற்கையமைப்பினையும், சூழ்நிலை யினையும், பழக்கவழக்கங்களையும் பொறுத்து விளையாட்டு களும் வேறுபட்டமையும். எனவே, தமிழர்களுக்குரிய விளை யாட்டுகள் எவை என்பதனை இனங்கண்டு கொள்வதற்கும் இவ்வாய்வு பயன்படுவதாய் அமையும்.