பொருளடக்கம்
அணிந்துரை
முன்னுரை
1. தமிழ்நாட்டின் தொன்மை
2. தமிழ்நாட்டில் சமணப் பரவல்
3. குகைத்தளக் கல்வெட்டுகளும் படுக்கைகளும்
4. தமிழி கல்வெட்டுகளும் சமணமும்
5. இலக்கியங்களில் சமணம்
6. சமணக் கலைகள்
7. சமணத்தின் வீழ்ச்சி
முடிவுரை
துணை நூற்பட்டியல்
பின்னிணைப்புகள்
கலந்தாய்வு
தகவலாளர்கள்
குகைத்தளக் கற்படுக்கைப் படங்கள்
இந்நூல் தமிழ்நாட்டில் சமணப் பரவல், குகைத்தளக் கல்வெட்டுகளும் படுக்கைகளும், தமிழி கல்வெட்டுகளும் சமணமும், இலக்கியங்களில் சமணம், சமணக் கலைகள், சமணத்தின் வீழ்ச்சி முதலான கூறுகளை ஆராய்கிறது.
சமணப் படுக்கைகள் சார்ந்துள்ள கல்வெட்டுகள் மூலமாகத் தமிழ் மொழியின் வளர்ச்சியையும் துறவிகள் மொழியைப் பயன்படுத்திக் கொண்ட முறையையும் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
சமணத் துறவிகளின் கோட்பாடுகள் தமிழர் வாழ்வில் இணைக்கப்பட்டதைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் கொண்டு அறியமுடிவதைப் போன்று சமணப் படுக்கைகள் சார்ந்துள்ள கல்வெட்டுகளின் மூலமாகவும் அறிந்துகொள்ள முடியும் என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.
தமிழ்நாட்டு நில அமைப்புக்கு ஏற்ப ஐந்நில அமைப்பு, அதன் தன்மை, இயற்கைச் சூழல், அதன் மாற்றம், அம்மாற்றங்களால் ஏற்படும் நன்மை தீமைகள், வானியல் மாற்றத்தால் நிலத்தில் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து தெரிவித்தல், உயிரினங்களுக்கு ஏற்படும் நோய்கள், தாவரங்களின் மருத்துவக் குணங்களைப் பயன்படுத்தும்முறை, காலமாறுதல், இயற்கை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைப் பயன்படுத்திக் கொள்ளல், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளல் முதலான செயல்களைத்
குகைத்தளத்தில் வாழ்ந்த சமணத் துறவிகள் கைக்கொண்டிருந்த முறைகளைக் கல்வெட்டுகள் மூலமாகக் கிடைக்கும் சான்றுகளைக் கொண்டு எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
Reviews
There are no reviews yet.