உணவும் தமிழரும்
தமிழிலக்கியங்கள் உணவின் தேவையை எடுத்து விளக்கு வதோடு அந்த உணவை மற்றவர்களுக்கும் கொடுத்து வாழ்வது இன்றியமையாத செயல் என்று பாடல்களின் வழி சொல்லி நிற் கின்றன. நாகரிகத்திலும், பண்பாட்டிலும் உலகிற்கு எடுத்துக்காட் டாய் விளங்கிய, விளங்குகின்ற தமிழினம் உணவை உண்பதிலும் அதன் பகுதியில் பலவற்றைப் பிரித்துச் சமைந்து உண்பதிலும் எல்லோருக்கும் முன்னோடியாகவிளங்குகிறது என்பதை இலக் கியச சான்றுகளின்றும் உணரமுடிகிறது. உயிர் வகைகள் முழு வதற்கும் இயற்கையால் வழங்கப்பட்ட உணவையும், உணவுப் பொருள்களையும் தமக்குந் தான் சொந்தமென்று சுருட்டி வைத்துக் கொள்வது எவ்வளவு கொடுமைபான வஞ்சகச்செயல் என்பதை விளக்கமாகக் குறட்பாக்கள் பல எடுத்துரைக்கின்றன. காட்டாக
‘இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்’
என்ற குறளைக் கூறலாம். புறப்பாடல் நூல்கள் தமிழரின் உணவுப் பொருட்களைப் பற்றிய செய்திகளை மிகுதியாகத் தரு கின்றன. பசிய இலைகளையும் கீரை வகைகளையும், கிழங்கு வகைகளையும், பழ வகைகளையும், சிலவகைக் கொட்டை களையும், தினை, நெல் முதலிய புல் வகை உணவுகளையும், ஊன் களையும், மீன்களையும் உண்ட தமிழர் ஆருயிர்க்கு என்போடி யைந்த தொடர்பு போல உணவுப்பொருட்களைப் போற்றினர். கள் வகைகள், இளநீர், நுங்கு, பால்பொருட்கள், கஞ்சி முதலிய உணவுகளோடு இறைச்சி உணவையும் சுட்டும், அட்டும், புழுக் கியும், பொரித்தும் பயன்படுத்தினர். துணை நிலையில் அப்பம், கூட்டு முதலியவற்றையும் உணவாகப் பயன்படுத்தினர். உண வோடியைந்து வாழ்ந்த தமிழரின் உணவு பற்றிய பல நிலைகளில் வழங்கும் குறிப்புக்களைத் தொகுக்கப்படும்போது தமிழரின் அக் கால உணவுக் கொள்கையைத் தெளிவாகக் காட்டும் சான்றுகளாக விளங்குகின்றன. தமிழரின் இலக்கியங்கள் மட்டுமல்லாமல், நிகண்டுகளும், கல்வெட்டுச் சான்றுகளும் மென்மேலும் துணை நின்று உணவு பற்றிய செய்திகளை விரித்துரைக்கின்றன.