ஊரும் பேரும் கல்வெட்டுகளில் கோயில்களும் கொடைகளும் (செய்யாறு) – ச. கிருஷ்ணமூர்த்தி

560

Add to Wishlist
Add to Wishlist

Description

திருவோத்தூர்க் கல்வெட்டுகளில் பயின்று வரும் நாட்டுப் பிரிவுகள்;

பல்குன்றக்கோட்டம்
தரையூர் நாடு

காலியூர்க்கோட்டம்
வெண்குன்றக் கோட்டம்
களத்தூர்க்கோட்டம்
ஆகிய கோட்டங்களும்,
காழியூர் நாடு
காயிரும்பேடு நாடு
காசிரம்பெரு நாடு
கோவிலூர் நாடு
வாதவூர் நாடு
திருமுனைப்பாடி நாடு
செங்குன்ற நாடு
பாராசூர் நாடு

ஆகிய நாடுகளும் பயின்று வந்துள்ளன.

மேலும்,

திருவோத்தூர் ஏரி
செம்பியன் மாதேவிப் பேரேரி கேசவ வாய்க்கால்
ஐயங்கொண்ட சோழப்பேராறு
கார்மான்கால்
மழவராய மாவண்டூர் ஏரி

போன்ற நீர்நிலைகளும் குறிக்கப்பட்டுள்ளன. சேயாற்றை யொட்டி இராஜராஜன் பெருவழி இருந்துள்ளது.

வரிகள்

கல்வெட்டுகளின் வாயிலாக, பழங்காலத்தில் அரசுகளும் ஊர்ச்சபைகளும் வசூலித்த வரிகளைக் காணலாம். சங்க காலத்தில் ஆறில் ஒரு பங்கு நில வரியாக இருந்தது. பிற்காலச் சோழர் காலத்திலும் ஆறில் ஒரு பங்காகவே இருந்தது என சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் கருதுவார்கள்.

நிலவரி, புரவுவரி என அழைக்கப்பட்டது. புரவு வரிக்காகவே ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு திணைக்களம் இருந்தது. தொண்டை நாட்டுப்புரவு வரித் திணைக்களம் குறித்துத் தென்னிந்தியக் கல்வெட்டுகள் மூன்றாம் தொகுதி எண் 142 குறிப்பிடுகிறது.

நிலவரி தவிர தொழில்முறையில் பலவரிகள் வசூலிக்கப் பட்டன. சோழர் காலத்தில் வரிகுறைவாக இருந்ததாகவே சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிடினும் உண்மையில் சங்க காலத்தை விட ஏன் – தற்காலத்தை விட மிகுதியே எனலாம்.

சோழர் கால வரிகள்

நெல்லாயம்
காசாயம்
வேலிப்பயிறு தாப்படியரசி
காசந்தராயம்
நெல்லந்த ராயம்
பூஞ்செடிப்பாட்டம்
மாவடை
ஆசுவிகள் பேர்க்கடமை
ஊர்க்கணக்கர் வரி
உவச்சன் பேர்க்கடமை
அச்சுத்தறி
சாலியர் மனைத் தறி
வாணிகர் பேர்க்கடமை
செக்குமின் வரி
கோலியத்தகை கடமை
ஏரி மீன்பாட்டம்
குற்றத் தெண்டம்
பட்டித் தெண்டம்
அரிமுக்கை
சிறுபாடிக்காவல்,
எடுத்துக்கொட்டி

பாண்டியர் கால வரிகள் :

நன்செய் கடமை
புன்செய் கடமை
ஆயம்
நெல்லாயம்
பொள்வரி
காசுகடமை
காசாயம்
தறிஇறை
தட்டார் பாட்டம்
ஊர்க்கணக்கர் கடமை
பொதுமக்கள் பேர்க்கடமை
செட்டிகள் பேர்க்கடமை
வாணிகர் பேர்க்கடமை
செக்கிறை
மாவடை
குளவடை
நாட்டுவரி நாட்டு விநியோகம்

 

 

Additional information

Weight0.4 kg