தமிழக முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்

600

வெறும் மத வரலாறு மட்டுமல்ல; தமிழக முஸ்லிம்களின் சமூகம், கல்வி, பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் கூறுகளையும் விரிவாக அலசுகிறது. பல்வேறு அரசுகளிலும், அரசியல் அரங்கிலும் முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பை இந்நூல் தெளிவுபட விளக்குகிறது. தமிழகத்திற்கும் அரபு நாட்டிற்குமான தொன்மையான தொடர்பையும், அதன்வழி தமிழகத்தில் இஸ்லாம் எவ்வாறு பரவியது என்பதையும் இந்நூல் நுண்ணிதாக ஆராய்கிறது.

Add to Wishlist
Add to Wishlist

Description

முஸ்லிம் அல்லாதவர்களும் அறியத்தக்க எளிய மொழிநடையில் வெளிவந்துள்ள சிறந்த நூல்!

இந்நூல், அறிமுகம் முதலாக, “கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே” தமிழ்ச் சமுதாயத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு இரண்டறக் கலந்துள்ளனர் என்பதை அழகாக எடுத்துரைக்கிறது. இருபது அத்தியாயங்களில் விரியும் இப்பேருரை, தமிழக முஸ்லிம்களின் ஆழமான வரலாற்றை ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்கிறது.

இது வெறும் மத வரலாறு மட்டுமல்ல; தமிழக முஸ்லிம்களின் சமூகம், கல்வி, பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் கூறுகளையும் விரிவாக அலசுகிறது. பல்வேறு அரசுகளிலும், அரசியல் அரங்கிலும் முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பை இந்நூல் தெளிவுபட விளக்குகிறது. தமிழகத்திற்கும் அரபு நாட்டிற்குமான தொன்மையான தொடர்பையும், அதன்வழி தமிழகத்தில் இஸ்லாம் எவ்வாறு பரவியது என்பதையும் இந்நூல் நுண்ணிதாக ஆராய்கிறது.

இறைவனின் நேசர்களான கம்பம் வாவேர் சூஃபி, திருச்சி நத்ஹர் வலி பாபா, நாகூர் ஷாகுல் ஹமீது ஆண்டகை போன்றோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் ஆற்றிய ஆன்மீகப் பணிகளையும் இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. மேலும், தமிழக அரசியலில் தடம் பதித்த முஸ்லிம் ஆளுமைகள் பற்றியும் அறியத் தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

மன்னர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலங்களில் தமிழக முஸ்லிம்களின் வாழ்க்கை முறை, அவர்களின் பங்களிப்பு ஆகியவற்றை இந்நூல் விவரிக்கிறது. குறிப்பாக, உருது பேசும் முஸ்லிம்களின் தமிழகக் குடியேற்றம் பற்றிய முக்கியமான பதிவுகளும் இதில் உள்ளன.

இந்திய விடுதலைப் போராட்டத்திலும், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியிலும் தமிழக முஸ்லிம்களின் பங்களிப்பை அழுத்தமாகப் பதிவு செய்வதோடு, அவர்களின் மதத்தைத் தாண்டிய தேசப்பற்றையும் சிறந்த சான்றுகளுடன் இந்நூல் உறுதி செய்கிறது. இறுதியாக இடம்பெற்றுள்ள ‘ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி’ என்ற கட்டுரை, தெளிவான பார்வையையும், உன்னதமான நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.

தமிழக முஸ்லிம்களின் வரலாறு மற்றும் பண்பாட்டை முழுமையாக அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இது ஒரு கலங்கரை விளக்கம் போன்ற நூல்!

Additional information

Weight0.5 kg