Description
விஜயநகரப் பேரரசால் நியமிக்கபட்டுப் பின்பு தனியாட்சி பெற்று பெரும் சிறப்புடன் விளங்கிய நாயக்க மன்னர்களின் வரலாற்றினை எளிமையாகவும், தெளிவாகவும் பதிவு செய்துள்ளது, ‘தஞ்சை நா. எத்திராஜ்,’ அவர்களுடைய இந்த புத்தகம்.
எவ்வாறு மதுரை நாயக்க மன்னர்கள், இதர நாயக்க மன்னர்களான தஞ்சை மற்றும் செஞ்சி நாயகர்களை காட்டிலும் சிறப்புற்று இருந்தனர் என்பதற்கான காரணிகளையும் இப்புத்தகத்தின் வாயிலாக நன்கு அறிய முடிகிறது.
மேலும் தஞ்சை நாயக்கர்களின் கலை திறனையும், செஞ்சி நாயகர்களின் கோட்டையின் உறுதியினையும், அவர்களின் வரலாற்றினையும் மெச்சி அழகாக பதிவிட்டுள்ளார் ஆசிரியர். மேலும் பலக் காலங்களாக சௌராட்டிரம் பேசும் மக்களின் தமிழக குடிபெயர்ப்பில் இருந்து வந்த முரண்பாடுகளையும் மிகத் தெளிவாகக் கலைந்திருகிறார் ஆசிரியர். தமிழக வரலாற்றில் மிக அவசியமான சில ஏடுகளை அலசித்தீர்க்க விரும்புவோர், இப்புத்தகத்தின் ஏடுகளை புரட்ட வேண்டியது அவசியம்.
– தினேஷ் கண்ணா




























