தமிழக வரலாற்றில் பெரம்பலூர் – ஆசிரியர்: ஜெயபால் இரத்தினம்

900

‘தமிழ் வரலாற்றில் பெரம்பலூர்’ என்ற தலைப்பில் உள்ள இந்நூல், மனிதனுக்கு முந்தைய பழங்கால புவியியல் காலம் முதல் அண்மைக்காலம் வரையிலான முழுமையான உள்ளூர் வரலாற்றை வழங்குகிறது. இந்த குறிப்பிடத்தக்க பிராந்திய வரலாற்றைக் கட்டமைக்க விரிவான களப்பணிகள், முதன்மை ஆதாரங்கள் மற்றும் வரலாற்று ஆய்வுகள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை அறிஞர் ஜெயபால் ரத்தினம் உன்னிப்பாக முன்வைக்கிறார். பல்வேறு காலகட்டங்களை உள்ளடக்கிய இந்நூல் பெரம்பலூரின் புவியியல் அம்சங்கள், தனித்துவமான தொல்லியல் கண்டுபிடிப்புகள் மற்றும் சோழர், விஜயநகர மற்றும் நாயக்கர் காலங்கள் உட்பட பல்வேறு பேரரசுகளின் போது அதன் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்கிறது. இந்த விரிவான மற்றும் பாராட்டுக்குரிய படைப்பு ஒவ்வொரு பெரம்பலூர் வாசகர் இல்லத்திலும் இடம் பெறத் தகுதியானது.

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

தொல்லுயிரி காலம் முதல் தமிழக வரலாற்று காலம் வரை பெருங்கற்கால கல்வட்டங்கள் முதல், கோட்டைகள் வரை, சிறந்த தொல்லியல் தடயங்களைத் தன்னகத்தே கொண்ட பெரம்பலூர் மாவட்டம் பற்றிய வரலாற்று களஞ்சியம்.

தமிழக வரலாற்றில் பெரம்பலூர்
ஆசிரியர்: ஜெயபால் இரத்தினம்

பொருளடக்கம்

1. நிலவியலமைப்பு
2. தொன்மையும் தனித்துவமும்
3. சங்க காலமும் பெரம்பலூர் வட்டாரமும் 4. களப்பிரர் – பல்லவர் காலம்
5.கற்காலப் பண்பாடு
6. பிற்காலச் சோழப் பேரரசு
7. பாண்டியப் பேரரசு
8. விஜயநகரப் பேரரசு – நாயக்கர் அரசுகள்
9. வாலிகண்டபுரி அரசு
10. மராட்டிய அரசில் வாலிகண்டபுரி
11. முகலாய அரசுகள்
12. ஆங்கிலேய அரசு
13. விடுதலை வேள்வி
14. மக்களாட்சி
15. வாலிகண்டபுரம் – வரலாற்றுச் சின்னம்
16. இரஞ்சன்குடி கோட்டை
17. இலாடபுரம்
18.உ.வே.சா.வும் பெரம்பலூர் வட்டாரமும்
19. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
20. வரலாற்றுச்சுவடுகள்
21. துணைநூற்பட்டியல்

அணிந்துரை

‘தமிழக வரலாற்றில் பெரம்பலூர்’ என்னும் தலைப்பிலான இந்நூல் மனிதன் தோன்றுவதற்கு முன்பிருந்த தொல் நிலவியல் வரலாற்றையும் தொடர்ந்து பெரம்பலூர்ப் பகுதியில் தொல் மனித வரலாறு முதற்கொண்டு அண்மைக் காலம் வரையிலான சான்றுகளையும் தரும் ஒரு முழுமுதல் வட்டார வரலாற்றுப் படைப்பாகத் திகழ்கிறது.

ஒவ்வொரு மனிதரும் தனது வாழ்நாளில் ஒரு கதையாவது எழுத முடியும் என்று மேலைநாட்டு அறிஞர் ஒருவர் கூறினார். வாழ்நாளின் பட்டறிவுகளைக் கோர்வையாக எழுதினாயே அது ஒரு கதையாக முடியும் என்பதே இதன் கருந்து. இது மிகவும் எளிதானது. ஆனால் ஒரு வரலாற்று நூலை எழுதுவதற் குக் கடின உழைப்பும் நடுநிலையான கருத்தாக்கங்களும் ஒருவருக்குத் தேவை. வரலாற்று நூல்களை எழுதும்போது பலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கருத்தைக் கூறப் பல சான்றுகளை உடன் கொள்ள வேண்டும். இவ்வகையில் வரலாற்றாய்வில் மிகத்தேர்ந்தவர்களே நல்ல நூலைப் படைக்க முடியும்.

வரலாறு எழுதமுனையும்போது அதன்காலகட்டத்திற்கேற்றவாறு சான்றுகளைத் தேடவேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழக வரலாற்றை எழுதத் துணியும்போது அக்காலத்தைச் சார்ந்த கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வில் கிடைத்த தொல்பொருள் எச்சங்களின் வரலாறு, கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் வாழ்விடங்கள், பலரின் பயணக்குறிப்புகள் போன்ற சான்று களைத் துணை கொண்டு எழுதவேண்டும். இடைக்கால வரலாறு எனில் அக்காலத்தைச் சார்ந்த சான்று களான கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்களைத் துணை கொள்ள வேண்டும். காகிதம் பயன் பாட்டிற்கு வந்த காலத்தில் காகித ஆவணங்களை வரலாறு எழுதப் பயன்படுத்த வேண்டும். காகித ஆவணங்கள் தமிழக ஆவணக் காப்பகங்களில் கிடைக்கும். இது தவிர இதுவரை எழுதப்பட்ட வரலாற்று ஆய்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு பகுதியின் முழு வரலாறு எழுத வேண்டும் எனில் மேற்குறித்த அனைத்துச் சான்றுகளையும் பயன்படுத்த வேண்டும். இம்முழு பணிகளையும் செவ்வனே மேற்கொண்டு அறிஞர் ஜெயபால் இரத்தினம் அவர்கள் இந்நூலை வெளியிட்டுள்ளார் என்பது பாராட்டத் தக்கது.

வரலாற்றை ஒரு தேசியக் கண்ணோட்டத்தில் இந்திய வரவாறு என்றும் தமிழக வரலாறு என்றும் எழுதும் போக்குதான் இன்றளவும் ஆய்வாளர்களிடையே வெகுவாகக் காணப்படுகிறது. ஆனால், இந்தியா பன்முகத் தன்மைகள் கொண்ட நாடு. இதற்கான பொது வரலாறு ஒருமுகப் பார்வையை மட்டுமே அளிக்கும். இந்திய வரலாற்றுப் போக்கில் ஒவ்வொரு வட்டாரத்தின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, பன்முகத் தன்மை கொண்ட இந்திய வரலாற்றில் இந்தியாவின் வட்டார வரலாறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வட்டார வரலாறுகள் எழுதும் போக்கு அண்மையில்தான் வேகமெடுக்கத் துவங்கியுள்ளது. பொதுவாக வட்டார வரலாறுகள் மிகச் சிறிய நூல்களாகத்தான் எழுதப்பட்டுள்ளன.

ஒரு நாட்டின் வரலாற்றைக் குறிப்பிட்டுப் பின்னர் ஒவ்வொரு காலகட்டத்திலும் வரலாறு எழுதப்படும் காலத்தில் அவ்வட்டாரம் வரலாற்றுப் போக்கில் என்ன பங்கு வகித்தது என்பது குறித்து எழுதுவது ஒரு வகையான உத்தி. அவ்வகையில் இவ்வுத்தியைக் கையாண்டு, தமிழ்நாட்டில் மிக விரிங்க எழுதப்பட்டுள்ள ஒரு வட்டார வரலாற்று நூல்களில் இது முதன்மையானது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

‘தமிழக வரலாற்றில் பெரம்பலூர்’ என்னும் தலைப்பிலான இந்நூல் மனிதன் தோன்றுவதற்கு முன்பிருந்த தொல் நிலவியல் வரலாற்றையும், தொடர்ந்து பெரம்பலூர்ப் பகுதியின் தொல் மின் வரலாற்றையும் அண்மைக் காலம் வரையிலான சான்றுகளையும் மிகவிரிவாக ஆசிரியர் தத்துள்ளார். இதற்கு அவர் கடினமான களப்பணியை மேற்கொண்டது மட்டுமின்றி முதன்மைச் சான்றுகளையும், இது வரை பெரம்பலூர் குறித்து வெளிவந்துள்ள அனைத்து வரலாற்று ஆய்வு நூல்களையும், கட்டுரைகளையும் தமது ஆய்விற்குச் செம்மையாகப் பயன்படுத்தியுள்ளார்.

‘நிலவியலமைப்’ என்னும் முதல் இயலில் பெரம்பலூர் வட்டாரத்தின் நிலவியல் குறிந்து

விளக்கமாகத் தத்துள்ளார். இவ்வியலில் பெரம்பலூர் வட்டாரத்தில் உள்ள ஆறுகள், குன்றுகள், காடுகள்

குறித்த விளக்கத்தை அளித்திருப்பது தமது பின்வரும் வரலாற்றுச் செய்திகளுக்குப் பின்னணியாக, ஒரு

வாசகரை அப்பகுதிக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டியாக அமைகிறது.

“தொன்மையும் தனித்துவமும்’ என்னும் இரண்டாம் இயலில் தமிழகத்தில் வேறெங்கும் இல்லாது பெரம்பலூர் வட்டாரத்திற்கே உரிய நிலவியல் தனித்துவமாக இப்பகுதியில் புதைந்துள்ள தொல்லுயிர் படிமங்கள் குறித்த விரிவான செய்திகளைத் தருகிறார். இப்பகுதி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல்பகுதியாக இருந்தது என்பதைப் பெரம்பலூர் வட்டாரப்பகுதிகளில் கிடைத்துள்ள பல வகையான தொல்லுயிரினப் படிமங்கள் வாயிலாக நிறுவுகிறார். மேலும் இப்பகுதியிலுள்ள மலைகளின் நிலவியம் அமைப்பு குறித்தும் தகுந்த ஆய்வுச் சான்றுகளுடன் நிறுவுகிறார்.

“கற்காலப் பண்பாடு என்னும் மூன்றாம் இயலில் மனிதன் தோன்றிய பின்னர் முதல் தொழில் நுட்பக் காலமான கற்காலம் குறித்த விரிவுரையைத் தந்து அது தமிழக அளவில் எங்கெங்கு இருந்தது. என்பதை அளித்து இக்காலத்தில் பெரம்பலூர் வட்டாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்காலச் சான்று களைக் கோர்வையாகத் தந்துள்ளார். இக்கற்காலத்தை நன்கு விளங்கிக்கொள்ளும் வகையில் முதலில் கற்காலங்களைக் குறித்த விரிவுரையும் பின்னர்ப் பெரம்பலூர் வட்டாரத்தில் கிடைத்த சான்றுகளையும் அளித்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

களப்பிரர்-பல்லவர் காலம் என்னும் தலைப்பிலான இயலில் தமிழகத்தைப் போலக் களப்பிரர் காலத்தில் பெரம்பலூர் வட்டாரத்திலும் சான்றுகள் கிடைக்கவில்லை என்பதைக் கூறிப் பின்னர் வந்த பல்லவர்காலத்தில் இருந்த பெரம்பலூர் வட்டார ஊர்களையும் அதன் வரலாற்றையும் சொல்லிக் செல்கிறார். அவர்கள் காலத்தில் இருந்த சமய நிறுவனங்களான கோயில் குறித்தும் விளக்கியுள்ளார்.

‘பிற்காலச் சோழப்பேரரசு’ என்னும் தலைப்பிலான இயலில் சோழப்பேரரசு காலத்தில் விளங்கிய அரசியல், சமுதாய நிலைகளை விளக்கி அக்காலத்தில் பெரம்பலூர் வட்டாரத்தில் விளங்கிய போசாளர் கல்வெட்டுகள், பெரம்பலூர் வட்டார நிர்வாக அமைப்புகளான பிரம்மதேயம், ஊர், நகரம் குறித்த செய்திகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். சுல்வெட்டுகளில் வழங்கி வந்த ஊர்ப்பெயர்களில் பல இன்றும் உள்ளதையும் சில மாற்றம் பெற்றதையும் அறிந்து கொள்ள முடிகிறது. பெரம்பலூர் வட்டாரத் தில் விளங்கிய வணிக நகரமான வாலிகண்டபுரம் பற்றியும் அங்கு வெவ்வேறு வணிகக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆசிரியர் அனைத்து சான்றுகளின் துணைகொண்டு விவரித்துள்ளார். சோழர் காலத்தில் சிறந்து விளங்கிய கோயில்கள் அவற்றிற்கு வழங்கப்பட்ட தானங்கள் குறித்தும் ஆசிரியர்

விரியாகத் தந்துள்ளார். அதேபோல் பெரம்பலூர் வட்டாரத்தில் தொடர்ந்து இருந்து வந்த சமணச் சமயச் சான்றுகளையும் விளக்கியுள்ளார். ‘பாண்டியப் பேராசு’ என்னும் தலைப்பிலான இயலில் சோழப் பேரரசு வீழ்ச்சியுற்றுச் சிறிது

காலம் பாண்டியர்களின் எழுச்சியுற்ற காலத்தில் கிடைத்த கல்வெட்டுகளைக் கொண்டு பெரம்பலூர் வரலாற்றையும் அதன் சமூகப்போக்கையும் ஆசிரியர் தெளிவாக எடுத்துரைக்கிறார். ‘விஜயநகரப் பேரரசு – நாயக்கர்கள் அரசுகள் என்னும் தலைப்பில் பெரம்பலூர் வட்டாரத்தில் தோன்றிய புதிய ஊர்கள், வணிகம், சத்திரங்கள், கோயில்கள், நிர்வாகப் பிரிவுகள் குறிந்த செய்திகளையும்

அப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் பெரம்பலூர் வட்டார நிலையையும் தெளிவாக ஆசிரியர் தந்துள்ளார்.

‘வாலிகண்டபுரி அரசு’ என்னும் தலைப்பிலான இயலில் பீஜப்பூர் சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட ஒரு புதிய நிர்வாகப் பிரிவு வாலிகண்டபுரத்தைத்தலைமையிடமாகக் கொண்டு விளங்கியதையும் சுல்தான்களுக்கும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட வணிக உறவுகளையும் ஆசிரியர் விரிவாகத் தந்துள்ளார். ‘மராட்டிய அரசில் வாலிகண்டபுரி என்னும் தலைப்பிலான இயலில் எவ்வாறு மராட்டிய

அரசின்கீழ் பெரம்பலூர் வட்டாரம் இருந்தது என்பதைத் தகுந்த சான்றுகளுடன் தந்துள்ளார்.

“முகலாய அரசுகள்” என்னும் தலைப்பிலான இயலில் கர்நாடகப்போர் எனக் குறிப்பது தவறு எனவும் அதைச் சோழமண்டலப்போர்’ எனக் குறிக்கவேண்டும் என்ற கருத்தைக் குறிப்பிட்டுப் பெரம்பலூர் வட்டார வரலாற்றைக் கூறிச் செல்கிறார். நாயக்கர் காலத்திற்குப்பின் மாற்றம் பெற்ற அக்காலக் கிராம ஆட்சி முறையையும் தன்னாட்டுச் சிறப்புகளையும் ஆசிரியர் விரிவாகத் தந்துள்ளார்.

‘ஆங்கிலேயர் அரசு’ என்னும் தலைப்பிலான இயலில் சென்னை மாகாணம் உருவான வரலாறு, அதற்குட்பட்ட பெரம்பலூர் பகுதியின் வரலாறு குறித்த விரிவான விளக்கங்களை ஆசிரியர் தந்துள்ளார். இக்காலத்தில் நிகழ்ந்த அனைத்து சமூக, அரசியல் மாற்றங்களைத் தகுந்த சான்றுகளுடன் ஆசிரியர் விரிவாகத் தந்துள்ளார்.

‘விடுதலை வேள்வி’ என்னும் தலைப்பிலான இயலில் பெரம்பலூர் வட்டாரத்தில் விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற தலைவர்களையும் அவர்களது ஊர்களையும் அவர்கள் பங்குபெற்ற போராட்ட நிகழ்வுகளையும் ஆசிரியர்தொகுத்து வழங்கியுள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இச்செய்திகள் பெரம்பலூர் வட்டாரம் விடுதலைப் போரில் முக்கியம் வாய்ந்த பங்கினை ஆற்றியது என்பதை அறிய உதவுகிறது.

‘மக்களாட்சி’ என்னும் தலைப்பிலான இயலில் இந்தியா விடுதலை பெற்ற பின்னர், பெரம்பலூர்

வட்டாரத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் ஆட்சியமைப்புகளையும் விரிவாக ஆசிரியர் தந்துள்ளார்.

இயல்களின் இறுதியாக நான்கு இயல்களில் வாலிகண்டபுரம்-வரலாற்றுச் சின்னம்’, ‘இரஞ்சன் குடிகோட்டை. ‘இலாடபுரம்”, ‘உ.வே.சா.வும் பெரம்பலூர் வட்டாரமும்’ என்னும் தலைப்பில் விரிவான செய்திகளை ஆசிரியர் தருவது நூலின் சிறப்பாகும்.

இறுதியில் பெரம்பலூர் வட்டார ஊர்களின் வரைபடத்தையும், வரலாற்றுச் சின்னங்களின் ஒளிப்படங்களையும் சான்றாகச் சேர்த்தது நூலுக்கு அணி சேர்ப்பதுபோல் உள்ளது.

பொதுவாக வரலாற்று நூல்களில் அடிக்குறிப்புகளுடன் எழுதுவது வழக்கம். ஆசைல் அவை நூலைப் படிப்போரைத் திசைதிருப்பும் வகையில் அமையும் ஆகையால் இந்நூலில் அடிக்குறிப்புகளைப் பயன்படுத்தாமல் ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்களின் பட்டியலை இறுதியில் ஆசிரியர் செல்வனே அளித்துள்ளார்.

வட்டார வரலாற்றை விரிவாகக் காட்ட முயலும் முதன்முயற்சி இந்நூலாகும். இதற்காக ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்நூல் பெரம்பலூர் வாசகர்கள் அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒன்று என்றால் அது மிகையல்ல. இந்நூலை வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் படித்து, பெரம்பலூர் வட்டாரம் குறிந்த செய்திகளை அறிந்து போற்றவேண்டும் என்பதே எனது அவா. ஆசிரியருக்கு எனது வாழ்த்துகள்,

முனைவர் ந. அதியமான்
பேராசிரியர் மற்றும் சுவடிப்புலத்தலைவர் ஆட்சிக்குழு உறுப்பினர்
தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-613010.

ஆசிரியர் உரை:

 

Weight2 kg