இந்த நூல் தமிழகத்தில் இருந்த பல்வேறு தொழில்கள், சமுதாயத்திற்குள் ஏற்பட்ட பிணைப்புகள், உழைப்பாளர்களின் செய்கைகள் மற்றும் வளர்ச்சி பற்றி ஆழமாக ஆய்வு செய்கிறது. சமுதாயங்களுக்கான வரி, தொழில் வரி, குடும்ப வரி வசூலிப்பு, வேளாண்மை மற்றும் கைவினைஞர் தொழிலுக்கு விதிக்கப்பட்ட வரிகள், வரிச்சுமை, அரசாங்க வரிவசூல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல் பற்றி எடுத்துக் கூறுகிறது. பண்டமாற்று முறையிலிருந்து பணப் பொருளாதாரத்திற்கு மாறிய காலகட்டத்தில் இந்துக்கோயில் ஊழியர்கள் மற்றும் அடிமைகளின் வாழ்நாள் அனுபவங்கள். இந்துமடங்களில் வேலைசெய்த ஆண், பெண் பணியாளர்கள், அடிமைகள் வாழ்க்கை நிலை மற்றும் சமூகத் தாக்கம் குறித்து விரிவாக விளக்குகிறது. தமிழகத்தில் சாதிகளின் எழுச்சியும், பழங்குடி குழுக்கள் உடனான தொடர்புகளும், உயர் மற்றும் கீழ்நிலை தகுதிரஸ், வலங்கை, இடங்கை என்ற இரண்டு பிரிவுகளில் மக்களைப் பொருத்துதல், உட்சாதிகளின் தோற்றம்.
சமூக பாரபட்சங்களின் வளர்ச்சி. தீண்டத்தகாதவர்களும் புதிய வளர்ச்சியும், அடிமைகள் மற்றும் சாதி விவர சமூக உண்மைநிலை குறித்த வியப்பூட்டும் தகவல்களும் இந்த நூலில் உள்ளன. முதலியார் மற்றும் பிள்ளை என்பவை சாதியைக் குறிப்பதாக இல்லை என்றும், சைவ மடங்களில் மிகுந்த மரியாதைக்குரிய பட்டமாக இருந்ததை காலப்போக்கில் மக்கள் தங்கள் பெயருக்கு பின்னால் சேர்க்க ஆரம்பித்ததை ஆதாரங்களோடு எண்பிக்கிறது.
முன் அட்டைப்படம்:
புதுச்சேரியில் தொழில்கள், சாதிகள், உழைப்பாளர்கள், 1831 தேசிய நூலகம், பிரான்சு