தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல்: அமைப்புமுறை நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு

300

ஆங்கிலேயர் ஆட்சியில்தான் பழங்குடி மக்களும் பஞ்சம மக்களும் இந்து மதத்திற்குள், முதல் கணக்கெடுப்பில் 1871இல் சேர்க்கப்பட்டனர் என்றும், இதன் ஒரு பகுதியாகவே பின்னர், சமத்துவமின்மையின் அடிப்படைக் கோட்பாட்டில், பல இடங்களில் இந்துக் கோயில் நுழைவுப் போராட்டங்களுக்கு இட்டுச் சென்றது உருவானது என்பதும் விரிவாக அலசப்பட்டுள்ளது. மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் விடுதலை உரிமைகளுக்காகப் போராடியது ஆராயப்பட்டுள்ளது.

Add to Wishlist
Add to Wishlist
Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

இந்த நூல் பார்ப்பனர்கள் தமிழகத்திற்கு வடக்கிலிருந்து 7ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை புலம்பெயர்ந்தது பற்றியும், வேளாளர்களின் எதிர்வினைகள் மற்றும் சமூகத் தாக்கங்கள் பற்றியும் நன்கு விளக்குகிறது. தமிழக ஆட்சியாளர்கள் ஆதரித்ததால், பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர்-அல்லாதார் இடையே ஏற்பட்ட திருமண உறவுப் பிறப்பு மக்களை, 196 சூத்திரர் சாதிகளில் (98 வலங்கை 98 இடங்கை) இரண்டு பிரிவுகளில் எவ்வாறு பொருத்தினர் என்பன விளக்கப்பட்டுள்ளன.

மக்களின் தொழில்கள் சாதிகளாக 10ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை மாற்றம் பெற்றதைத் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. சைவ, வைணவ மதங்கள் ஆதரவால், தமிழகத்தில் தீண்டாமை 12ஆம் நூற்றாண்டு முதல் தீவிரமாக அறிமுகமாகி, சமுதாயத்தில் கீழ்நிலைத் தொழில் செய்தவர்களை அடையாளப்படுத்தி, குடிமக்களுக்கான சமத்துவத்தை அழித்து, சமூகப் பாகுபாடுகள் எவ்வாறு ஏற்பட்டன என்று பகுப்பாய்வு செய்கிறது. சென்னை, கடலூர், புதுச்சேரி மற்றும் தரங்கம்பாடி ஐரோப்பியக் குடியிருப்புகளுக்கு, மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக இடம்பெயர்தல் (1652-1822), மேலும் சமூக முன்னேற்றங்களுக்காக வலங்கை இடங்கைச் சாதிகளுக்கு இடையே கடுமையாகப் போட்டிபோட்டுக் கொண்டதால் ஏற்பட்ட சாதிச் சச்சரவுகள், பூசல்கள், மோதல்கள், கலகங்கள் பற்றியும், சம உரிமைக்காக நடந்த போராட்டங்கள் பற்றியும் தெளிவாக எடுத்துக்கூறுகிறது.

தமிழில் தோன்றிய சாதியப் புராணங்கள் பற்றியும், வடஇந்தியாவிற்கு மாறாகத் தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் அமைப்பு மற்றும் நடைமுறைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயரின் 1871ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு முன்பு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் இந்துக்களாக இருந்ததே கிடையாது என்றும், இந்து மதத்தில் இல்லாத இவர்களை எந்தச் சாதியில் வைப்பது, எப்படி சேர்ப்பது என்பன எவ்வாறு நிகழ்ந்தது என்றும் எடுத்துக்கூறுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில்தான் பழங்குடி மக்களும் பஞ்சம மக்களும் இந்து மதத்திற்குள், முதல் கணக்கெடுப்பில் 1871இல் சேர்க்கப்பட்டனர் என்றும், இதன் ஒரு பகுதியாகவே பின்னர், சமத்துவமின்மையின் அடிப்படைக் கோட்பாட்டில், பல இடங்களில் இந்துக் கோயில் நுழைவுப் போராட்டங்களுக்கு இட்டுச் சென்றது உருவானது என்பதும் விரிவாக அலசப்பட்டுள்ளது. மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் விடுதலை உரிமைகளுக்காகப் போராடியது ஆராயப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல்: அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு

 

Edition : 1
Category : History
ISBN : 9788123445465
Author : S. Jeyaseela Stephen
Translator : K. Elangovan, Puthuvai Seenu. Thamizhmani
Weight : 120.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Pages : 238
Publishing Year : 2023

Weight270 kg