Description
தமிழகத்தில் கடந்த கால அறிவு நமது எதிர்காலத்திற்கு வழிகாட்டக்கூடியது என்பதற்கு தமிழர் நீர் மேலாண்மை அறிவே மிகச் சிறந்த சான்றாகும். வளர்ச்சி என்ற பெயரால் மிகப்பெரும் நாகரிக சமூகமான தமிழ்ச் சமூகத்தின் பண்டைய அறிவும் அதைத் தாங்கி நிற்கும் தமிழ் மொழியும் புறக்கணிக்கப்பட்டு அந்த இடத்தில் நவீனம் என்ற பெயரால் மேற்கத்திய அறிவு தமிழ்நாட்டு நீர்ப்பாசன மேலாண்மையில் திணிக்கப்பட்டது. அவற்றுள் ஏற்கக் கூடியவை சில இருந்தாலும் பொதுவில் அது தமிழினத்தின் மீதான அறிவுத்துறை மேலாதிக்கமாக இருந்தது.






























