Sale!

தமிழ்நாட்டுச் சமண ஓவியங்கள் – சா.பாலுசாமி

Original price was: ₹3,500.Current price is: ₹3,400.

ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி கடந்த இருபதாம் நூற் றாண்டு வரையில் தமிழகத்தில் சமணம் எப்படி இருந்தது என்பதை ஆவணங்களுடன் படிப் போரும், பார்ப்போரும் வியக்கும் வகையில் நூலின் அனைத்துப் பக்கங்களும் வண்ணப் பக் கமாக இருப்பதும் சிறப்பம்சமாகும்.பேராசிரியரான இந்நூலாசிரியர் சா.பாலு சாமி, திறமையான கலை, வரலாற்று ஆய்வா ளரும் கூட என்பதை நூலின் மூலம் நிரூபித்துள்ளார்.

Add to Wishlist
Add to Wishlist

Description

சித்தத்தன்னவாசல் ஓவியங்கள் தமிழ்நாட்டின் பெருமை என்று சொல்கிறோம். உண்மையில், அந்த ஓவியங்கள் ஆயிரம் ஆண்டுகளைக் கடக்க முடியாமல் பெருமளவு மங்கிவிட்டன. அதன் அருமை அருமை முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாமல் இயற்கையாகவும், மனிதத் தலையீட்டாலும் சிதைக்கப்பட்டுவிட்டன. இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டில் 9ஆம் நூற்றாண்டு தொடங்கி, கடந்த நூற்றாண்டு வரை சமண ஓவியக் கலையை முழுமையான வண்ணப்படங்களுடன் ஆய்வுப் பின்னணியில் பதிவுசெய்து தந்திருக்கிறது பேராசிரியர் சா.பாலுசாமியின் தமிழ்நாட்டுச் சமண ஓவியங்கள்’ நூல்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. சித்தன்னவாசல் மட்டுமின்றி, மதுரை ஆனைமலை, ஆர்மாமலை, திருமலை, திருப்பருத்திக்குன்றம், கரந்தை, மேல்சித்தாமூர், வீடூர் ஆகிய இடங்களில் உள்ள ஓவியங்களும் இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியக் கலை ஆவணமான இந்த நூலை, அவருடைய முந்தைய நூல்களைப் போலவே இலக்கியத்துடன் ஒப்பிட்டுக் கலைக் கோட்பாடு அடிப்படையில் எழுதியுள்ளார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட ‘திருப்புடைமருதூர் ஓவியங்கள்’ நூலைத் தொடர்ந்து, இந்த நூலும் ஓவியக் கலை நூல்கள் வரிசையில் மற்றொரு மணிமகுடம்.

தமிழ்நாட்டுச் சமணம் எனும் தலைப்பில் ஏற்கெனவே அனந்தபுரம் கிருஷ்ண மூர்த்தியால் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் சமணம் சார்ந்த கட்டடக் கலை, சிற்பக்கலைகள் குறித்தும் பல நூல் கள் வெளிவந்துள்ளன.

ஆனால், சமண ஓவியக் கலை குறித்த நூல்கள் தற்போதுதான் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை திருப்பரங்குன்றம், கரந்தை, ஆனை மலை, சித்தன்னவாசல், திருமலை என பல இடங்களில் ஆவணப்படுத்தும் வகையிலும், ஆய்வுக்கு உட்படுத்தும் நிலையிலும் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி கடந்த இருபதாம் நூற் றாண்டு வரையில் தமிழகத்தில் சமணம் எப்படி இருந்தது என்பதை ஆவணங்களுடன் படிப் போரும், பார்ப்போரும் வியக்கும் வகையில் நூலின் அனைத்துப் பக்கங்களும் வண்ணப் பக் கமாக இருப்பதும் சிறப்பம்சமாகும்.பேராசிரியரான இந்நூலாசிரியர் சா.பாலு சாமி, திறமையான கலை, வரலாற்று ஆய்வா ளரும் கூட என்பதை நூலின் மூலம் நிரூபித்துள்ளார்.

சுவர் ஓவியக் கலையை நுட்பமாக ஆராய்ந்துள்ளதுடன், வெவ்வேறு இடங்களில் காணும் ஓவியங்களுக்கு இடையே உள்ள வேறு பாடுகளை ஆய்வு நோக்கில் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

தமிழகத்தில் சமண வரலாற்றை ஆய்வுச் சான்று படங்களுடன், சாமானியர் முதல் ஆய் வாளர் வரையில் அனைத்துத் தரப்பினரும் அறிந்து போற்றும் வகையில் இந்த நூல் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது.

வெளியீடு: செம்மொழி தமிழாய்வு நிறுவனம்

தமிழ்நாட்டுச் சமண ஓவியங்கள். சா.பாலுசாமி

பின்னூட்டம் காண்க

#Sithannavasal #books #bookstagram #booklover #BookRecommendations #bookreview

Additional information

Weight 2 kg