தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு – குடவாயில் பாலசுப்ரமணியம் – Thanjavur Nayakar History in Tamil

750

தஞ்சாவூர் நாயக்கர் வம்சம், கிபி 1635ல் விஜயநகர மன்னர் அச்சுதராயர் காலத்தில் ஏற்பட்டது. இதன் முதல் நாயக்கர் செவ்வப்ப நாயக்கர் ஆவார். இந்த வம்சம் தஞ்சை பகுதிகள், வடஆற்காடு பகுதிகளை ஆட்சி செய்தது. இவர்களது காலத்தில் டேனியயர்கள் , போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. இவர்கள் காலத்தில் மதுரை நாயகர்களுடன் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன.

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

தஞ்சாவூர் நாயக்கர்கள் வரலாறு (கிபி 1535 முதல் 1675 வரை) : Thanjavur Nayakar History in Tamil

தஞ்சாவூர் நாயக்கர் வம்சம், கிபி 1635ல் விஜயநகர மன்னர் அச்சுதராயர் காலத்தில் ஏற்பட்டது. இதன் முதல் நாயக்கர் செவ்வப்ப நாயக்கர் ஆவார். இந்த வம்சம் தஞ்சை பகுதிகள், வடஆற்காடு பகுதிகளை ஆட்சி செய்தது. இவர்களது காலத்தில் டேனியயர்கள் , போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. இவர்கள் காலத்தில் மதுரை நாயகர்களுடன் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. முடிவில், தஞ்சை நாயக்க அரசு, மதுரை நாயக்க அரசுக்கும், கடைசியில் மத்திய அரசுக்கும் பலியாகி விழுந்தது.

செவ்வப்ப நாயக்கர் ( கிபி 1535 முதல் கிபி 1590 வரை)

செவ்வப்ப நாயக்கர், தஞ்சையில் முதல் நாயக்க மன்னர் ஆவார். இவருடைய காலத்தில் விஜயநகர பேரரசர், இராமராயரின் கட்டளைப்படி, விட்டல தேவராயன், கிபி 1544 இல் தமிழ்நாட்டுக்குள் பழைய எடுத்து வந்தார். அப்போது அவருக்குத் துணையாக செவ்வப்ப நாயக்கர் நின்றார். விஜயநகர பேரரசு இராமராயர் தலைமையின் கீழ் நடத்திய தலைக்கோட்டைப் போரில் செவ்வப்ப நாயக்கரும் தன் படைகளை அனுப்பி, பேரரசருக்கு உதவி புரிந்தார்.

அரசியல் வரலாறு

இவருடைய காலத்தில் தான், தஞ்சை மீண்டும் சிறப்பு பெற்றது. இவர் புதிய நகரம், கோட்டை, கொத்தளங்கள், அரண்மனை, அகழி, தடாகங்கள் போன்றவற்றை அமைத்தார். இவர் தஞ்சை கோட்டையையும் அரண்மனையையும் எழுப்பினார். நீர்ப்பாசன மேம்பாட்டிற்கும், குடிநீர் வசதிக்காகவும் ‘ செவ்வப்பன் ஏரிட என்ற ஒரு பெரிய நீர்நிலையை ஏற்படுத்தினார். இவருடைய காலத்தில் தெலுங்கு மக்கள் தமிழ்நாட்டில் அதிகம் குடியேறினர். முக்கியமாக சௌராஷ்டிரர்கள் தஞ்சாவூரில் அதிகம் குடியேறினர்.

செவ்வப்ப நாயக்கரும்- போர்ச்சுகீசியம்

இவரது ஆட்சிக்காலத்தில் போர்ச்சுக்கீசியர்கள் நாகப்பட்டினத்தில் ஒரு வணிக அமைப்பு ஏற்படுத்தினர். அப்போது அவர்கள் 10 கிறிஸ்தவ தேவாலயங்களை இப்பகுதியில் கட்டினர். ஆனால் செவ்வப்ப நாயக்கருக்கு போர்ச்சுகீசியர்களின் இலங்கை உறவுகள் குறித்து கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இலங்கை மன்னர்கள் தஞ்சாவூர் நாயக்கருக்கு உறவுக்காரர் ஆவார். ஆகையால், போர்ச்சுகீசியர்கள் இலங்கை அரசருடன் போர் புரியும் போதெல்லாம், தஞ்சை நாயக்க மன்னர், இலங்கை மன்னரோடு சேர்ந்து போர்ச்சுகீசியரை எதிர்த்ததாக தெரிகிறது.

செவ்வப்ப நாயக்கர் கால மத நிலை

பொதுவாகவே தமிழக மன்னர்களுக்கு எல்லா சமயங்களுடனும் அனுசரித்துப் போக வேண்டும் என்பது இயல்பாக அமைந்த குணமாகும். ஆகவே தமிழ்நாட்டு மன்னர் செவ்வப்ப நாயக்கரும் எல்லா மதங்களுடனும் இணைந்தே சென்றனர். ஆனால் இவர் சைவத்தின் பால் ஈடுபாட்டுடன் இருந்தார் என்று அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனாலும், வைணவ மதம் சம்பந்தமாக, தண்ணீர் பந்தல் வைத்து, அடியார்களுக்கு உபசாரம் செய்தார். ஸ்ரீரங்கத்தில், ஒரு தோப்பையும், மண்டபத்தையும் ஏற்படுத்தித் தந்தார். மேலும், மத்வ ஆசாரியர் மடத்தைச் சார்ந்தவர்களுக்கும், கிராமங்களை தானமாக அளித்தார். இவர் திருவண்ணாமலைக்கு இராஜகோபுரம் ஒன்றை கட்டித் தந்தார். மேலும் இவர் தஞ்சை பெரிய கோயில், திருவாரூர் திருக்கோயில் வடக்கு கோபுரம், ஸ்ரீசைலம் போன்றவைகளில் விமானங்களில் திருப்பணி செய்து முடித்தார்.

இவர் சமண மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும் கிராமங்களைத் தானமாக தந்தார். மேலும், இவர் தஞ்சாவூர் ‘ஷமஸ்பீர்பள்ளி’ என்னும் பள்ளிவாசலை சேர்ந்த பக்கிரிகளுக்கு ஒரு வேலி நிலம் கொடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் இவர் போர்ச்சுகீசியர்கள் கிறிஸ்தவ மதத்தை ‘ வேளாங்கண்ணி’ ஊரிலிருந்து பரப்பிய போது எந்தவித ஆட்சேபனையும் செய்யவில்லை. இவர் தஞ்சை பெரிய கோயில் சுப்ரமணியருக்காக ‘ கந்தக்கோட்டம்’ என்ற கோயில் எடுத்தார்.

அச்சுதப்ப நாயக்கர் (கிபி 1572 முதல் கிபி 1600 வரை)

செவ்வப்ப நாயக்கருக்கு அடுத்து பதவியேற்றவர் அச்சுதப்ப நாயக்கர் ஆவார். விஜயநகர அரசு தலைக்கோட்டை யுத்தம் கிபி 1565ல் தோற்கடிக்கப்பட்ட போதும், அதற்கு விசுவாசமாகவே இவர் இருந்தார். இவருடைய காலத்தில் விஜய நகரத்தின் மீது கோல்கொண்டா படைகள் படையெடுத்து தலைநகரம் பெனுகொண்டவை சுற்றிவளைத்தனர். அப்போது அச்சுதப்ப நாயக்கர் தனது இளவரசன் ‘ இரகுநாதன்’ தலைமையில் ஒரு படை ஒன்றை அனுப்பினார். இந்த படைகள் விஜயநகர அரசருக்கு உதவியாக இருந்தது கோல்கொண்டா படைகளை தோற்கடிக்க உதவின. மீண்டும் ஒரு முறை மதுரை நாயக்கர் முத்து வீரப்பன், விஜயநகர அரசர் வேங்கடபதி தாயாருடன் போரிட்டபோது, இவர் ஒரு படையை அனுப்பி, முத்துவீரப்ப நாயக்கர் படைகளை ‘ வல்லம் பிரகாரா’ என்ற இடத்தில் தோற்கடித்தார். மேலும் இவர் ஸ்ரீரங்க கடவுளின் விமானத்தை பொன்மயமாக்கினார். காவிரிக்கரையில் திருவையாறு, கும்பகோணத்தில் படித்துறைகளையும். மண்டபங்களையும் கட்டினார். காவிரியில் ஒரு அணையையும் கட்டினார். சிவகங்கையில் ஒரு கோட்டையைக் கட்டினார். இவர் ‘ லட்சுமி விலாசம்’ என்ற தர்பார் அறையை காட்டினார்.

இரகுநாத நாயக்கர் கிபி 1600 முதல் கிபி 1634 வரை

இரகுநாத நாயக்கர், தஞ்சையின் முக்கியமான மன்னராவார். இவர், விஜயநகர மன்னர் முதலாம் வேங்கடவின் விசுவாசி ஆவார். ஆகையால் செஞ்சி மன்னர் இரண்டாம் கிருஷ்ணப்பா, விஜயநகர மண்ணறை எதிர்த்தபோது, மன்னர் சார்பாக போரிட்டு அவருக்கு வெற்றி தேடித்தந்தார்.

இவர் இரண்டாம் வேங்கடவிற்கும் சமகாலத்து அரசர் ஆவார். ஆரம்பத்தில் விஜயநகர மன்னருக்கு விசுவாசமாக இருந்தார். ஆனால் காலப்போக்கில் அவருக்கு திரை செலுத்துவதை விட்டுவிட்டார் கிபி 1610 இல், சான்தோம் நகரை, விஜயநகர அரசர் வேங்கடா முற்றுகையிடும் பொழுது, இவர் போர்ச்சுகீசியருக்கு ஆதரவாக இருந்து விஜயநகர அரசரை எதிர்த்தார். ஆனால் விஜயநகர அரசரை எதிர்க்கும் பணி தொடரவில்லை. இரண்டாம் வேங்கடா இறந்ததும், இரகுநாத நாயக்கர், விஜயநகர அரசர் இராமதேவருக்கு ஆதரவு தந்தார். அதற்காக, இவர் விஜயநகர யச்சம நாயக்கருடன் சேர்ந்து கொண்டார். மதுரை முத்து வீரப்ப நாயக்கரையும், ஜக்கராயரையும் ‘ தோப்பூர்’ என்ற இடத்தில் கிபி ஆயிரத்து 1617ல் எதிர்த்தார். அதன் மூலம், தஞ்சாவூர் அரசின் விசுவாசத்தை விஜயநகர மன்னருக்கு காட்டிக் கொண்டார்.

இவர் இலங்கை மன்னருடன் உறவு வைத்திருந்தார். ஆகவே இலங்கை மன்னர், போர்ச்சுகீசியர்களால் தோற்கடிக்கப்பட்ட பொழுது, அவருக்கு உதவியாக தன்னுடைய படைகளுடன் சென்று, போர்ச்சுகீசியர்களைத் தோற்கடித்தார். ஆனால் மீண்டும் போர்ச்சுகீசியர்கள், இலங்கை அரசரை விரட்டியபோது, மீண்டும் தன்னுடைய படைகளுடன் உதவி புரிந்தார். போர்ச்சுகீசியர்களின் தலைநகராகத் திகழ்ந்த நாகப்பட்டினத்தை தாக்கினார்.

இவர் போர்ச்சுகீசியர்களின் அத்துமீறல்களை தடுத்தார். அதற்காக, மற்ற எல்லா வெளிநாட்டு கம்பெனிகளுக்கும், தஞ்சாவூரில் தங்கள் வணிக கிடங்கு கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார். கிபி 1610 இல் தேவனாம்பட்டினத்தில் டச்சுக்காரர்களுக்கு வணிக ஸ்தலம் ஏற்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தார். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் மேலும் மேலும் வளர்ச்சி அடைவதை தடுத்தார். ஆகவே டச்சுக்காரர்கள் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி அளிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில், கிபி 1620 இல் தரங்கம்பாடியில் டேனிஸ்கார்களுக்கு ஒரு கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து பிரிட்டிஷ்காரர்களும் காரைக்காலில் வணிகம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால், இரகுநாத நாயக்கர், அவர்களுக்கு எளிதில் அனுமதி கொடுக்கவில்லை. அதே நேரத்தில் டேனிஷ்காரர்கள் மன்னருடன் உறவு கொண்டனர். டெனிஸ் காரர்களுக்கு தொல்லை கொடுத்த போர்ச்சுகீசியர்கள் தண்டித்தார்.

மேலும் இவர் விஜயநகர மன்னர் இரண்டாம் இராமரராயருக்குப் பகைவர்களால் ஏற்பட்ட இடையூறுகளை நீக்கி கும்பகோணத்தில் முடிசூட்டினார். இதன் நினைவாக ஒரு நாணயத்தையும் வெளியிட்டார்.

இவர் மதுரை நாயக்கர் மகளை மணம் முடித்திருந்தார். அதன்மூலம் அவருக்கு ராமபத்ரன், விஜயராகவன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர், இரகுநாத நாயக்கருக்கு பின்பு அவருடைய இளைய மகன் விஜயராயன் அரசுரிமை பெற்றார். மூத்த மகன் ராமபத்ரன், மராத்திய தலைவர் சாகாஜியுடன் சேர்ந்து கொண்டு, தஞ்சாவூர் நாயக்கர் வீழ்ச்சிக்கு காரணமானார்.

இரகுநாத நாயக்கர் மிகச்சிறந்த பக்திமானாக இருந்தார். இவர் டிசம்பர் மாதம் முழுவதும் கடவுளையே நினைத்திருந்தார். அப்போது ஒரு சன்யாசி போல் வாழ்ந்தார். தனக்கு வேண்டிய உணவைத் தானே சமைத்து கொண்டார். இவர் குருவுக்கு பயந்து, நடந்து கொண்டார். தலை முழுவதும் மொட்டை அடித்துக்கொண்டு காணப்பட்டார். இவருடைய சபையில் ராமபத்ராப மற்றும் மதுர வாணி போன்ற பெண் புலவர்கள் இருந்தனர். ராமபத்ராப என்பவர், இரகுநாத பையன் பயந்தய என்ற சமஸ்கிருத நூலை எழுதினார். இரகுநாத நாயக்கர் பல்லவ மன்னர் மகேந்திரவர்மனை போல ஒரு இசைக் கலைஞர் ஆவார். இவரும் ‘ஜெயந்த சேனா’ என்ற ஒரு புதிய ராகத்தை கண்டுபிடித்தார். மேலும் இவர் ‘சங்கீத சபா’ மற்றும் ‘பாரத சபா’ என்ற 2 சமஸ்கிருத நூல்களை எழுதியுள்ளார். இவர் ஒரு சிறந்த இராம பக்தர். இவர் கும்பகோணம் இராமசாமி கோவிலுக்கு பல திருப்பணிகளைச் செய்தார். மேலும் கும்பகோணம் மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் 16 சிறு கோயில்களோடு தான மண்டபம் அமைத்தார். இவர் காலத்தில் ‘யக்ஷகானாம்’ என்ற இசை வழக்கிலிருந்தது.

விஜய இராகவ நாயக்கர் கிபி 1631 முதல் கிபி 1675 வரை
இரகுநாத நாயக்கர் கிபி 1631, தன்னுடைய மகன் விஜயராகவ நாயக்கிற்கு தஞ்சை அரியணையை விட்டுக் கொடுத்தார். இவர் தஞ்சாவூர் கோட்டையை கட்டி முடித்தார். இவரும் விஜயநகர அரியணை போட்டியில் கலந்து கொண்டார். அப்போதிலிருந்தே விஜயநகர மன்னர், மூன்றாம் ஸ்ரீலங்காவிற்கு எதிராக, திருமலை நாயக்கர் சேர்ந்த அணியில் ஒன்று சேர்ந்திருந்தார். ஆனால் திடீரென்று அந்த கூட்டணியிலிருந்து விலகி, விஜய நகர மன்னருக்கு ஆதரவாக மாறினார். இதனால், திருமலை நாயக்கர், கோல்கொண்டா சுல்தான்களை தமிழ்நாட்டுக்கு வரவழைத்தார். இந்த படையெடுப்பில், தஞ்சாவூர் நாயக்கர், கோல்கொண்டா படைகளிடம் சரண் அடைந்தார்.

மேலும் விஜயராகவ நாயக்கர் பிஜப்பூர் ‘அதில்ஷா’ என்பவரைத் தூண்டிவிட்டு, சகோஜி, முல்லா என்ற படைத்தலைவர்களின் கீழ் மதுரையை தாக்கும்படி செய்தார். அப்போது மதுரையை ஆண்ட இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர், விஜய இராகவ நாயக்கரின் உதவியை கேட்டார். ஆனால், விஜயராகவ நாயக்கர் உதவவில்லை. பிறகு, சுல்தான் அதில் ஷா என்பவர் ஷாஜி மற்றும் முல்லா என்பவர்களின் கீழ் அனுப்பிய படைகள் தஞ்சாவூரை தாக்கின. இதில் தஞ்சாவூர் படைகள் மீண்டும் சரணடைந்தன. இந்தப் போர் கடுமையான போர் ஆக இருந்தது. மக்கள் எல்லாரும் தெருக்களில் ஓடினர். ஆண்கள் குதிரை, யானைகளின் கீழ் சிக்கினர். பஞ்சமும், போடவும் மக்களை வாட்டியது. மக்கள் அரிசிக்காகவும், ரொட்டிக்காகவும் அடிமைகளாக மாறினர். இந்த சூழ்நிலையில் தாக்குப்பிடிக்க முடியாத பிஜப்பூர் சுல்தான் போரை நிறுத்தச் சொன்னார்.

விஜய இராகவ நாயக்கரின் கலை கலாசார பணிகள்

விஜய இராகவ நாயக்கர் தெலுங்கில் பல நூல்களை எழுதியுள்ளார். அவைகளில் சில஛ இராஜகோபாலவமிசமு, செங்கமலவல்லி பரியைமு, இராதா மாதவமு போன்றவைகளாகும். இரகுநாதயுதயமு, இரகுநாத நாயக்கா புதயரமு போன்ற காவியங்களை எழுதினார். இவரது அவையை, கோனேடி தீட்சிதர், புருஷோத்தம தீட்சதர், யக்ரு நாராயண தீட்சதர் போன்றவர்கள் அலங்கரித்தனர்.
இவர் பல திருக்கோயில் பணிகளை செய்தார். இவர் மன்னார்குடி திருமால் கோயிலை, 7 பிரகாரங்களோடும், தேரோடும் திருவீதிகளையும், புகழ்பெற்ற திருக்குளங்களையும், கட்டினார். மேலும், தஞ்சை பெரிய கோயிலுக்கு பல பணிகளை செய்தார். இவர் இராஜ கோயில் சக்கரம் கொண்ட காசுகளை வெளியிட்டார்.

விஜய இராகவ நாயக்கர், தினமும் ஒன்பது மணிக்கு 12000 பிராமணர்களுக்கு உணவளித்து விட்டே தான் காலை உணவை சாப்பிட்டார். தஞ்சாவூரிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று கடவுளை தரிசித்தார். இவர் ஒரு ‘தத்துவ அரசர்’ என்றழைக்கப்பட்டார். இவர் நாகப்பட்டினத்தை டச்சுக்காரர்களுக்கு அளித்தார்.

விஜய இராகவ நாயக்கரும் வெளிநாட்டவர்களும்

விஜய இராகவ நாயக்கர் காலத்தில், போர்ச்சுகீசியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கு இடையே போர் ஏற்பட்டது. டச்சுக்காரர்கள் கை ஓங்கி இருந்தது. அவர்கள் நாகப்பட்டினத்திலிருந்த போர்ச்சுகீசியர்களை விரட்ட முயற்சித்தனர். மேலும் டச்சுக்காரர்கள் கப்பல்கள் நாகப்பட்டினம் தரை இறங்க வந்தன. அப்போது விஜய இராகவ நாயக்கர் படை எடுத்துச் சென்றதால், டச்சுக்காரர்கள் ஓடிவிட்டனர். அதேநேரத்தில் தஞ்சாவூர் நாயக்கர், நாகப்பட்டினத்தில் இருந்த போர்ச்சுகீசியர்களின் விரட்ட முயற்சித்தார். இதனால் போர்ச்சுகீசியர்கள் நாயக்கரிடம் சரணடைந்து 11000 பகோடா நாணயங்களை செலுத்தினர். ஆனால் சில ஆண்டுகள் கழித்து போர்ச்சுகீசியர்கள் நாகப்பட்டினத்தில் பாதுகாப்பு மிக்க மதில்களை கட்டினர். இதைச் சுற்றிலும் 7 பீரங்கி தளங்களை அமைத்து கோட்டையை வலிமைபடுத்தினர். இதை விரும்பாத விஜயராகவ நாயக்கர் போர்த்துகீசியர்களை விரட்டவே விரும்பினார். ஆகையால் டச்சுக்காரர்களுக்கு ஆதரவளித்து, நாகப்பட்டினத்திற்கு படைகளுடன் விரைந்தார். இதைக் கண்டு போர்ச்சுகீசியர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் டச்சுக்காரர்களுக்கு நாகப்பட்டினத்தை கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டனர்.

விஜய இராகவ நாயக்கரும் டச்சு வணிகமும்

நாயக்கர், நாகப்பட்டினத்திலிருந்து, போர்ச்சுகீசியர்களை விரட்டிவிட்டு, டச்சுக்காரர்களுக்கு அந்த இடத்தை அளித்தார். நாகப்பட்டினத்தை சுற்றியிருந்த புத்தூர், முட்டம், வலச்சேரி போன்ற கிராமங்களை அளித்தார். அவர்கள் உள்ளூர் வணிகர்களுடன் சண்டை போடக்கூடாது என்று உத்தரவு போட்டார். ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட்களுக்கு தீர்வை வசூலித்தார். மேலும் கிபி 1666ல், நாயக்கர் நாயக்கர் திருமலைராயன்பட்டிணத்தையும் அளித்தார்.

விஜய இராகவ நாயக்கரும், டேனிஸ்காரர்களும்

விஜயராகவ நாயக்கர் காலத்தில், டேனிஷ்காரர்களின் நிலை, வியாபாரத்தில் இறக்கமாகயிருந்தது. ஆகவே அவர்களின் வணிக இருப்பிடம் தரங்கம்பாடியை கைப்பற்ற, ஆங்கிலேயர்கள் ஒருபுறமும், போர்ச்சுகீசியர்கள் ஒருபுறமும், டச்சுக்காரர்கள் ஒருபுறமும் முயற்சி செய்தனர். ஆனால் இவைகள் எதுவும், வெற்றி பெறவில்லை. ஆனாலும் டேனிஷ்காரர்கள், தரங்கம்பாடியை ஒரு இராணுவ கோட்டையாக கட்டிக் கொண்டனர்.

விஜய இராகவ நாயக்கரும் ஆங்கிலேயர்களும்

விஜய இராகவ நாயக்கர் காலத்தில் ஆங்கிலேயர்கள், தஞ்சையை வணிகக் கம்பெனி தலமாக்க முயற்சி செய்தனர். இவர்கள் காரைக்காலில் இறங்க முயற்சி செய்து தோல்வியுற்றனர். ஆனால் விஜய இராகவ நாயக்கர் ஆங்கிலேயர்களை அனுமதிக்கவில்லை.

மதுரை நாயக்கர் அரசியலில் தலையீடு

விஜய இராகவ நாயக்கர் மதுரை நாயக்கர் அரசியலிலும் தலையிட்டார். அவர் மதுரை சொக்கநாத நாயக்கிற்கு எதிராக கிபி 1659 இல், தளவாய் லிங்கம நாயக்கிற்கும்’ ராஜி என்பவருக்கும் உதவினார். மேலும் மதுரை சொக்கநாத நாயக்கருக்கு மகளை திருமணம் செய்து வைக்கவும் மறுத்தார். மதுரை சொக்கநாத நாயக்கர் பிஜப்பூர் சுல்தான் ‘ வானமியான்’ தன்மீது ஏற்படுத்திய படையெடுப்பை முறியடித்தார். பின்பு தஞ்சாவூர் மீது படையெடுத்தார். இந்த போரில், விஜய இராகவ நாயக்கர் தோல்வியடைந்தார். இவரின் மகள் ‘மன்னாருதாஸ்’ என்பவர் சிறை வைக்கப்பட்டார். விஜய இராகவ நாயக்கர் கொல்லப்பட்டார். அதற்குப் பின்பு, மதுரை சொக்கநாத நாயக்கரின் மாற்றான் தந்தை சகோதரர், முத்தழகிரி என்பவரை மதுரை சார்பாக, தஞ்சாவூரை ஆள நியமிக்கப்பட்டார். இத்துடன் தஞ்சாவூர் நாயக்கர் வம்சம் முடிவடைந்தது.

Weight0.500 kg