பெரியவங்க சொன்னா அந்தப் பெருமாளே சொன்ன மாதிரி என்பார்கள். அந்தப் பெருமாளே சொன்னால் எழுதினால் தொகுத்துத் தந்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்.
“தெக்கத்திக் கதைப் பாடல்கள்” எனும் நூலில் பேரா. அ.கா. பெருமாள் 6 கதைப்பாடல்களைத் தந்துள்ளார். குருகுல மக்கள் கதை – பாண்டவர் சரித்திரம், இராமகீர்த்தனம், இசக்கியம்மன் கதையும் வழிபாடும், பொன்னிறத்தாள் கதை, சித்தூர் தளவாய் மாடன், நல்லதங்காள் கதை என்பன அவை.
அவை இதிகாசம், புராணம், சமூகம் என்பனவற்றைக் கருவாகக் கொண்டுள்ளன. இவரைக் கதைப்பாடல்களின் காதலன் எனப் போற்றலாம்.
– காவ்யா சண்முகசுந்தரம்
காவ்யா
ISBN: 9789389 182989
பக்கம்: 948