தமிழிசை:
தமிழர் இசையே தமிழ் இசை. உலகின் முதல் இசை. ஏனெனில் மண்ணாகிய பண்பட்ட மருதநிலம் தோன்றி நாகரீகம் வளர்வதற்கு முன் மனிதன் மலைகளில், குகைகளில் வாழ்ந்த பழங்காலத்திலேயே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி. சங்க காலத்துக்கு முன்பே தமிழிசை தோன்றி வளர்ந்துள்ளது.
ஏழிசைப் பகுப்பு பண்ணமைப்பு, கருவியிசை, ஓசை அளவு, தாளவகை, தூக்கு, பிண்டி, பிணையல், வரிப்பாட்டு, வண்ணங்கள் போன்றவைகளை விளக்குகின்ற அழிந்துபோன தமிழிசை நூல்கள் பற்றி உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். அகத்தியம், ஆற்றிசை, இசைநுணுக்கம், இசைத்தமிழ், இந்திரகாளியம், களரியாவிரை, காமவின்னிசை, குணநூல்,குருகு,கூத்தநூல், கூத்துவரி, சயந்தம், சிற்றிசை, சிற்றிசைச்சிற்றிசை, செயிற்றியம், நுண்ணிசை, பஞ்ச பாரதீயம், பரதசேனாபதீயம், பரதம், பரிபாடல், பெருங்குருகு, பெருநாரை, பேரிசை, மகிழிசை, முதுகுருகு, முதுநாரை முறுவல், யாழ்நூல், வியாழமாலை அகவல், வெண்டாளி போன்ற தமிழிசை நூல்கள் இருந்தன.
இவற்றுள் பெரும்பான்மையானவை அழிந்துவிட்டன. இவற்றுள் விளக்கப் பெற்றுள்ள கருத்துக்கள், உலகில் வேறு எந்த நாட்டிசைக்கும் அமைந்து காணப்படாதவை.
ஆதிமனிதன், இனிமையாகவும், மனதிற்கு இதமாகவும் ஒலி எழுப்ப ஒருமுறை வகுத்தான். அதிலிருந்து இசைக்கலை பிறந்தது.
தமிழர், மிகப் பழங்காலத்திலேயே இசை உணர்வும், இசை அறிவும் பெற்றிருந்தனர் என்பதைத் தொல்காப்பியரும் அவருக்கு முன் இருந்து அழிந்த இசை நூல்களும் கூறுகின்றன.