எய்ட்ஸ் தொற்று குறித்து ஏறக்குறைய 30 ஆண்டுகளாகியும் சரியான புரிதல் இல்லை. சமூகச் செயல்பாட்டாளரான நூலாசிரியர் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுப் பணியில் இருந்துவரும் நிலையில், விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் நாவலை படைத்துள்ளார்.
நாவலின் கதாநாயகி சித்ரா தனது கணவர் சண்முகத்துக்கு ஏற்பட்ட முறையற்ற நட்பால் தொற்று உருவானது. இதனால் அவர் பணியிடத்திலும், உறவினர்களிடத்திலும் பாதிக்கப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் தத்ரூபமாய் எழுதியிருக்கிறார். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் புறக்கணிக்கப்படுவதையும், இதுதொடர்பாக மக்களிடையே ஏற்பட வேண்டிய மனமாற்றத்தையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.