உலகளவில் விவசாயத்தில் ஈடுபட்ட குழுக்கள் ஆண்கள் பயிருடுதலையும், விலங்குகள் விவசாயப் பகுதிகளை அண்டாத வண்ணம் காத்ததும் வந்தனர். எனவே, விலங்கு வேட்டை என்பது அவர்களின் உப தொழிலாக இருந்தது. அவர்களின் பெண்டிரின் முழுவேலை பயிர்களை தினமும் பராமரிப்பதில், களைகளை எடுப்பதிலும் இருந்தது. ஆனால், இப்பெண்டிருக்கான தனிப்பட்ட பொருளாதாரம் என்பது நூல் நூற்பதிலும், நெசவிலும் இருந்துள்ளது. அதுவே அவர்களின் தின வருவாயினை பெருக்கின. நூல் நூற்பதின் மூலம் பண்டமாற்று பெற்று தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்தனர்.
இதே பண்பு சங்க இலக்கியங்களிலும் காணப்படுவதை முனைவர் திரு. ஆ. மணவழகன் தமது தொலைநோக்கு என்ற நூலில் கூறியுள்ளார்.
“உடை உற்பத்திக்கானத் தொழில்நுட்பத்தினைப் பெண்கள் கற்றிருந்தனர். பழந்தமிழகத்து மகளிர் குடும்பப் பொருளாதாரத்தையும் உடையின் தேவையையும் கருத்தில் கொண்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டனர். முல்லை நிலத்துப் பெண்கள், மோர்விற்று தம் குடும்பப் பொருளாதாரத்தை வளப்படுத்தியதைப் போல, கணவனைப் பிரிந்த பெண்கள். தனியே இருக்கும் பெண்கள் உட்பட இல்லிருப்போர்.
தொழிலை வீட்டிலேயே செய்து வந்தனர். நெசவுத்தொழிலில் ஈடுபட்ட பெண்கள் ‘பருத்திப் பெண்டிர்’ என வழங்கப்படுகின்றனர். இவ்வகைப் பருத்திப் பெண்டிர் செய்த நூலாலான பனுவலை, ‘பருத்திப் பெண்டின் பனுவ லன்ன’ (புறம். 125: 11 என்று உவமையாக்குவார் புலவர் பருத்தியை எடுத்துவந்து, அதிலிருக்கும் தூசு, செற்றை ஆகியவற்றை நீக்கும் பணியில், இரவிலும், விளக்கொளியில் ஈடுபட்டிருந்த பருத்திப் பெண்டிரை.
சிறையும் செற்றையும் புடையுந ளெழுந்த பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து (4.326:4-5)
என்ற பாடலடிகள் காட்டுகின்றன. ஆண் துணை இல்லாத பெண்கள் சிறுதொழிலாக, இல்லத்திலேயே இந்நெசவுத் தொழிலைச் செய்தனர். இவ்வகைப் பெண்கள் தம் முயற்சியில் செய்த நுணங்கிய நுண்ணிய பனுவலை.
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த நுணங்கு நுண் பனுவல் போல (.353:1-2)
என்ற அடிகள் காட்டுகின்றன. ஆடையைக் குறிப்பதற்கு உடை (புறம் 390:4) ஆடை (பரி. 21:62). அறுவை(பொருநர்.83). துகில்குறு 55 பட்டினப். 106), கலிங்கம்(பெரும்பாண் 469. புறம்.397:15) முதலிய பெயர்கள் வழங்கப்படுகின்றன. இவையெல்லாம் காரணம் பற்றி அமைந்த பெயர்களாகும். இவையன்றி படப்பை, மெய்ப்பை. கச்சை, போர்வை போன்ற சிறப்புப் பெயர்களும் வழங்கப படுகின்றன.