இந்த நூல் தெற்குத் தமிழகக் கடற்கரையில் இடைக்காலப் பாண்டியர்களின் சீனா மற்றும் அரேபியாவுடனான கடல்வழி வணிகத்தின் வளர்ச்சி குறித்தும், போர்த்துக்கீசியர்களின் வருகையால் தூத்துக்குடித் துறைமுகத்தில் முத்துக்கள் மற்றும் சங்குகள் வர்த்தகம், குதிரைகள், யானைகள் இறக்குமதி மற்றும் வெடியுப்பு ஏற்றுமதி ஆகியவற்றையும் விளக்குகிறது. தூத்துக்குடி நகரம், மாநகரமயமாக்கல் குறித்தும் விரிவாக விளக்கும் நூல்
இந்த நூல் தெற்குத்தமிழகக் கடற்கரையில் இடைக்காலப் பாண்டியர்களின் சீனா மற்றும் அரேபியாவுடனான கடல்வழி வணிகத்தின் வளர்ச்சி குறித்தும், போர்த்துக்கீ சியர்களின் வருகையால் தூத்துக்குடித் துறைமுகத்தில் முத்துக்கள் மற்றும் சங்குகள் வர்த்தகம், குதிரைகள், யானைகள், இறக்குமதி மற்றும் வெடியுப்பு ஏற்றுமதி ஆகியவற்றையும் விளக்குகிறது. இலங்கையிலிருந்து பாக்குக்கொட்டைகள் தூத்துக்குடிக்கு ஏற்றுமதியாகின. தமிழ் வணிகர்கள் மற்றும் டச்சு நிறுவனத்தினர் அரிசியை இலங்கையில் இறக்குமதி செய்தல், தூத்துக்குடியிலிருந்து ஜாவா, இலங்கை, நெதர்லாந்து வரை டச்சுக்குழுமத்தின் துணி வணிக விரிவாக்கம் மற்றும் தூத்துக்குடி நகரம், மாநகரமயமாக்கல் குறித்தும் விரிவாக அலசப்பட்டுள்ளது. காலனிய ஆட்சியில் தூத்துக்குடியின் அடிமை வணிகம், தண்டனைக் கைதிகள், நாடுகடத்தப்பட்டவர்கள் வாழ்க்கைபற்றியும் விளக்குகிறது. உள்நாட்டுப் படகோட்டிகள், முத்துக்குளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை, வணிகர்கள், கைவினைஞர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் ஆகியோரின் இடம்பெயர்வு பற்றியும்
விவரிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகமானது இடைக்காலத்திலிருந்து காலனிய ஆட்சிக்கு மாறுவதைப்பற்றியும், காலனியப் பேரரசை விரிவடையச் செய்ததுபற்றியும் தெளிவாக எடுத்துக்கூறுகிறது.