எம்.டி. வாசுதேவன் நாயர் கேரளம் தந்த வியப்புக்குரிய எழுத்துக் கலைஞர். இளம் வயதிலேயே மொழி ஆளுமையும், மனிதர்களைக் கற்கும் ஆற்றலும், கலை ரசவாதமும் வல்லவராய்த் திகழ்ந்தவர். அற்புதமான இந்தக் கதைசொல்லி இந்நாவலின் மூலம் கங்கைக் கரைக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறார்.
மனிதன் காதலால் உயிர்ப்பதும் வேதனையால் மரணிப்பதும் எங்கும் காணப்படும் காட்சிதான். ஆனால் அதன் அகத்தையும் புறத்தையும் மயானத்தீ எரியும் வாராணசி நகரின் பின்புலத்தில் ஆய்வு செய்கிறது எம்.டி. வாசுதேவன் நாயரின் இந்த நாவல். மரணத்தின் குரூர அழகு நாவலின் வரிகளினூடே இழையோடுகிறது. வாசகர்கள் இந்த வசீகர வேதனைக்குள் நிச்சயம் ஆழ்வார்கள் என நம்பலாம்.
Page: 224