Description
ஒரு வம்சம் 600 ஆண்டு காலத்தில் எப்படியெல்லாம் துளிர்த்தும் துவம்சம் ஆகியும் உருமாறிக்கொண்டு இருந்தது என்பதைச் சொல்லும் வரலாறு இது. புனைவுகளில் மட்டும்தான் திடுக்கிடும் திருப்பங்களும், அலற வைக்கும் அழுகைகளும் நல்லது கூடி வரும்போது குலமே கெட்டுப் போகும் அளவுக்கு இழப்புகளும் இருக்க முடியுமா? இல்லை, உண்மை வரலாற்றிலும் இப்படி படிநிலை வளர்ச்சியைப்போல் நடக்கும் அல்லவா? அப்படி ஒரு குடும்பத்துக்காரராக டாக்டர். மு.ராஜேந்திரன் இருக்கிறார். எங்கோ ஓர் ஊருக்குப் போய், எவர் குலத்து கதையையோ கள ஆய்வு செய்து எழுதுவதைவிடத் தனது சொந்த வம்சத்தைப் பற்றி எழுதப் புகுந்தது முதல் துணிச்சல். அதில் எதையும் மறைக்காமல், உண்மையைப் பட்டவர்த்தனமாகச் சொல்ல முடிவெடுத்தது அடுத்த துணிச்சல். அதை லாவகமான மொழியில் சொல்லியும் காட்டியுள்ளதுதான் இந்த நூலின் வெற்றி. – ஜூனியர் விகடன் படித்து முடித்தவுடன் நாலு நாட்கள் கிடையிலேயே கிடந்தது புத்தகம், ராய கோபுரம் போல. – கி.ராஜநாராயணன்




